disalbe Right click

Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts

Friday, February 1, 2019

இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது எப்படி? - 2

இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது எப்படி?-2

இந்த உலகில் பிறந்தவர் அனைவருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது ஆகும்சிலரது  மரணங்கள் நம்மை அழவைக்கும் சிலரது மரணங்கள் ஒருவிதமான பயத்தை  நமக்கு ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்தினால் நடக்கும் மரணங்கள் நமக்கு எதிர்கால பயத்தை ஏற்படுத்தும். 
எதனால் பயம் ஏற்படுகிறது?
இந்த உலகில் யாராவது ஒருவரை சார்ந்து வாழ பழகிக் கொள்கிறோம். திடீரென அவர் ஒரு நாள் எதிர்பாராமல் இறந்து போனால் ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்வி குறியாகிவிடும். இறந்தவருடைய சொத்துகள், வங்கிக்கணக்கு விபரங்கள், கடன்கள், இன்ஷூரன்ஸ் திட்டங்கள்  பற்றி தெரிந்தவர்கள்  கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம்
ஆனால் இது பற்றிய விவரங்கள் தெரியாத இறந்தவரின் வாரிசுகளுக்கு மிக கஷ்டமாக இருக்கும். எங்கு, என்ன இருக்கிறது என்பதே தெரியாமல், இதையெல்லாம் எப்படி மீட்கப் போகிறோம் என்ற கவலை அதிகம் இருக்கும். இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து  கொண்டால் அந்த கடினமான சூழ்நிலையை கடந்து வரலாம்.
இறப்பு சான்றிதழ் / சட்ட வாரிசு சான்றிதழ்
இறந்தவர்களுடைய சொத்துகளை மீட்பதற்கு வங்கி, இன்ஷுரன்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்ட், அரசாங்க நிறுவனங்கள் என்று எதை அணுக வேண்டும் என்றாலும் நீங்கள் இறந்தவரது இறப்புச்சான்றிதழையும், வாரிசுச் சான்றிதழையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட அலுவலக அலுவலர்கள் அதைப் பற்றி உங்களுடன் பேசவே சம்மதிப்பார்கள். மேலும் இறந்தவருடைய கணக்கு விவரங்கள் பற்றியும்  அறிந்து வைத்துக்கொள்ள  வேண்டும்தனியான கணக்காக உள்ளதா? அல்லது இணைந்த கணக்காக உள்ளதா என்பதைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்து அதனை நீங்கள் வைத்திருந்தால், எளிமையாக சொத்துகளை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். உயில் எதுவும் அவர் எழுதி வைக்கவில்லை என்றால் நீங்கள் முதலில் நீதிமன்றத்தை அணுகி சட்ட வாரிசு சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழ்கள் பெற்றபிறகு .....
இந்த சான்றிதழ்கள் பெற்ற பிறகு சொத்துகளின் விவரங்கள், முதலீட்டு விவரங்கள் பற்றி முதலில் ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள். சொத்துகள், வங்கி கணக்குகள், டிமேட் கணக்கு விவரங்கள், மியூச்சுவல் பண்ட், பிஎப் முதலீட்டு விவரங்கள், வங்கி லாக்கர் விவரங்கள், கடன் விவரங்கள், இன்ஷூரன்ஸ் விவரங்கள் என அனைத்திற்கும் ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு அது சம்பந்தமான அலுலகங்களை அணுகுங்கள்.
இறந்தவருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பதையும், இந்த கடன்களைப் பெறுவத்ற்கு சொத்துக்கள் ஏதாவது அடமானம் வைக்கப்பட்டுள்ளதா? அதனை   திருப்புவதற்கு இன்னும்  எவ்வளவு காலம்  இருக்கிறது?  போன்ற விபரங்களைத் தெரிந்து கொண்டு கடன் வழங்கிய நிறுவனங்களை அணுக வேண்டும். அவர்களிடம் இறந்தவர் வாங்கிய கடன் பற்றிய விவரங்களை அறிந்த பிறகுதான் எதையும் முடிவு செய்ய இயலும்.
எடுத்துக்காட்டாக இறந்தவர் பெயரில் உள்ள சில இன்ஷுரன்ஸ் பாலிசிகளை வைத்துக் கொண்டே வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்திவிட முடியும்
முதலீடுகளை எப்படிக் கையாளுவது?
இறந்தவருடைய பெயரில் மியூச்சுவல் பண்ட், வங்கி கணக்குகளில் செய்துள்ள முதலீடுகளை  குறிப்பிட்ட நாட்களுக்குள் வேறொரு கணக்குக்கு மாற்றிக் கொள்ளவோ அல்லது முடித்துக் கொள்ளவோ வேண்டும். இதற்கான நடைமுறைகள் பெரும்பாலான நிறுவனங்களில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதனை அவர்களிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
இறந்தவருடைய வங்கிக் கணக்கானது வேறு ஒருவருடன் இணைப்பு கணக்காக இருக்கும் பட்சத்தில் இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் உடனடியாக கணக்கை அவர் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு இறந்தவருடைய இறப்புச் சான்றிதழ் மற்றும்  மருத்துவ விவரங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்க வேண்டும்.
வங்கி கணக்குகள்
வங்கி கணக்குகளுக்கும் மற்ற முதலீடுகளுக்கு அளித்த விவரங்களைதான்  அளித்து விண்ணப்பிக்க வேண்டும். இறந்தவருடைய வங்கிக் கணக்கில் மிகப் பெரிய அளவுக்கு தொகை இல்லையெனில் (15) நாட்களுக்குள்ளேயே பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்அபராதங்களைத் தவிர்க்க எந்தெந்த சேவைகள் இந்த வங்கி கணக்கிலிருந்து செலுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 
நீண்ட கால டெபாசிட்
பிக்ஸட் டெபாசிட் அல்லது நீண்ட கால பத்திரங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறுவது உங்களுக்கு மிக நல்லது.

************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 30.01.2017

Wednesday, August 15, 2018

உயில் எழுதாத சொத்து

உயில் எழுதாத சொத்து - பங்கு பிரித்துக் கொள்வது எப்படி?

படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்

உயில் எழுதி வைக்காத நிலையில் ஒரு ஆண் இறந்து போனால், அந்த ஆணின் சுய சம்பாத்திய சொத்துக்கள் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 (8) &, (9) பிரிவுகளினபடி அந்த ஆணின் வாரிசுகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால்.....?

உயில் எழுதி வைக்காமல் இறந்த ஆணிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால் அந்த சட்டத்தின் 10 வது பிரிவு அதற்கு மிகத் தெளிவாக வழி காட்டுகிறது. அந்த 10 வது பிரிவில் மொத்தம் நான்கு விதிகள் உள்ளது. அவை என்ன சொல்கிறது என்பதைப் பற்றி கீழே காணலாம்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 1

இறந்து போன ஆணுக்கு ஒரு மனைவி இருந்தால் அவருக்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும். அந்த ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால் அனைத்து மனைவிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பங்கு வழங்க வேண்டும்.

உதாரணமாக இறந்தவரது வங்கிக்கணக்கில் அறுபது லட்சம் ரூபாய் இருப்பதாகவும், அவரது உறவுகளாக இரண்டு மனைவிகள் ஒரு மகன் ஒரு மகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

(பணம் என்றால் அதனை பிரிப்பது இலகுவாக இருக்கும் என்பதாலும், படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் என்பதாலும் இந்தப் பதிவில் பணத்தை மட்டும் உதாரணத்திற்காக கூறியுள்ளேன்)

அந்த இரண்டு மனைவிகளுக்கும் சேர்ந்து ஒரு பங்கு (இருபது லட்சம்) அதாவது ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் பங்காக கொடுக்க வேண்டும். மீதமுள்ள ஒரு பங்கான நாற்பது லட்ச ரூபாயை அவரது மகனும், மகளும் ஆளுக்கு இருபது லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 2

இறந்து போன ஆணின் மகன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு, மகள்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு, இறந்து போன ஆணின் தாயாருக்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும்.

உதாரணமாக இறந்து போன ஆணுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும், இரண்டு மனைவியும், ஒரு தாயாரும் இருக்கிறார்கள் என்றும், அவரது வங்கிக் கணக்கில் அறுபது லட்சம் ரூபாயும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற சூழ்நிலையில் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956, பிரிவு-10, விதி 2டன் விதி எண் 1 யும் சேர்த்து பயன்படுத்தி பங்குகளை பிரித்துக் கொள்ள வேண்டும். இருக்கின்ற அறுபது லட்சத்தை ஐந்து பங்காக (ரூ.பனிரெண்டு லட்சம்) முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். அதில் தாயார், மகன், மகள்கள் ஆகிய நால்வருக்கும் தலா ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள ஒரு பங்கான ரூ.பனிரெண்டு லட்சத்தை அவருடைய மனைவிகள் இருவரும் ஆளுக்கு ஆறு லட்சமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 3

இறந்து போனவருக்கு முன்பாகவே அவரது மகன் இறந்திருந்தால் அந்த மகனின் வாரிசுகள் ஒரு பங்கையும், இறந்து போனவருக்கு முன்பாகவே அவரது மகள் இறந்திருந்தால் அந்த மகளின் வாரிசுகள் ஒரு பங்கையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக இறந்து போன ஆணுக்கு ஒரு தாயார் ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும், அவரது வங்கிக் கணக்கில் அறுபது லட்சம் ரூபாயும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956, பிரிவு-10, விதி 1. விதி 2-டன் விதி 3 யும் சேர்த்து பயன்படுத்தி பங்குகளை பிரித்துக் கொள்ள வேண்டும். இருக்கின்ற அறுபது லட்சத்தை நான்கு பங்காக (ரூ.பதினைந்து லட்சம்) முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். அதில் இறந்து போனவரது தாயாருக்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு, மகளுக்கு ஒரு பங்கு, அந்த மகனின் வாரிசுகளுக்கு அதாவது அந்த மகனின் மனைவி, மகன்கள் மற்றும் மகள்கள் (அவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் சரி)  அவர்களுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொள்ள வேண்டும்.

இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 4

விதி 3 ல் குறிப்பிடப் பட்டுள்ள பங்குகளை பிரித்து விநியோகம் செய்வது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது. விஷேசமாக ஏதுமில்லை. 

******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 16.08.2018