disalbe Right click

Showing posts with label பதிவுத்துறை. Show all posts
Showing posts with label பதிவுத்துறை. Show all posts

Sunday, November 11, 2018

மோசடி பத்திரப்பதிவு புகார் மேல்முறையீட்டில் மாற்றம்

மோசடி பத்திரப்பதிவு - புதிய சுற்றறிக்கை
மோசடி பத்திரப்பதிவு புகார் மேல்முறையீட்டில் மாற்றம்
மோசடி பத்திரப்பதிவு குறித்த மேல்முறையீடுகளை, அந்தந்த மண்டல, டி..ஜி.,க்களே விசாரிக்கலாம்' என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக, பத்திரங்கள் பதிவானால், அது குறித்த புகார்களை விசாரிக்கும் நடைமுறையில் குழப்பம் நிலவியது.
விசாரிக்க உத்தரவு
இதில், பதிவு அலுவலர்களை, வழக்கில் சேர்ப்பது தொடர்பாக, 2011ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 2017 நவ., 11ல், திரும்ப பெறப்பட்டதுஇதில், 2011 முதல், 2017 நவ., வரை, மோசடி பத்திரப் பதிவுகள் தொடர்பான புகார்கள் குறித்து, மாவட்ட பதிவாளர்கள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதில், மேல்முறையீடு செய்வோர், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தை அணுக வேண்டும் என, ஜூலையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் வர துவங்கி உள்ளன. இதில், மனுதாரர்கள், சென்னைக்கு வர வேண்டிய சூழல் எழுந்தது. இதனால் ஏற்படும் அலைச்சல் உள்ளிட்ட விஷயங்களை கருதி, சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
60 நாட்கள்
இதன்படி, மேல்முறையீடு செய்ய விரும்பும் புகார்தாரர்கள், அந்தந்த மண்டல, டி..ஜி.,க்களிடம் மனு அளிக்கலாம். இந்த மனுக்களை, 60 நாட்களுக்குள் விசாரித்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க, டி..ஜி.,க்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, பதிவுத் துறை பிறப்பித்து உள்ளது.
Letter No.41530/U1/2017 dated 09.11.2018   https://tnreginet.gov.in
நன்றி : தினமலர் நாளிதழ் - 11.11.2018

Saturday, October 27, 2018

இணையம் வழியாக பட்டா மாறுதல் படிவம்


இணையம் வழியாக பட்டா மாறுதல் படிவம்
சார்பதிவாளர் அலுவலகங்களில், இணையம் வழியாக பட்டா மாறுதல் செய்வதற்கு அனுப்பப்பட்ட  படிவத்திற்கு, ஒப்புகைச் சீட்டு வழங்கிடும் புதிய நடைமுறை, அமலுக்கு வருகிறது.
எஸ்.எம்.எஸ்., மூலம் ஒப்புகைச்சீட்டு
பட்டா மாறுதல் படிவத்தினை பதிவுத் துறைக்கு,  அனுப்பும் வசதி தற்போது கம்ப்யூட்டர்மயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆவணத்தினை பதிவு செய்த பின்னர், பட்டா மாறுதல் படிவத்தை, இணைய வழியாக, வருவாய் துறைக்கு, உடனுக்குடன் அனுப்பி, அதன் ஒப்புகைச் சீட்டு எண்ணை, ஆவணதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு விண்ணப்பம்
பதிவுத் துறை சார்பாக, பட்டா மாறுதல் படிவங்கள், வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டபோதும், அதற்கு அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. ஆவணதாரர், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிப்பதால், ஒரே சொத்திற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள்  அங்கு பெறும் நிலை உருவாகிறது.
29.10.2018 முதல் அமலுக்கு வருகிறது.
இதை தவிர்ப்பதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில், இணையம் வழியாக பட்டா மாறுதல் செய்வதற்கு அனுப்பப்பட்ட  படிவத்திற்கு, ஒப்புகைச் சீட்டு வழங்கிடும் புதிய நடைமுறை, 29.10.2018 முதல் அமலுக்கு வருகிறது.
ஒப்புகைச் சீட்டானது , அசல் ஆவணம் திரும்பப் பெறும்போழுதே, சார் - பதிவாளரால் கையொப்பமிட்டு ஆவணதாரருக்கு வழங்கப்படும். அந்த ஒப்புகைச் சீட்டில், வருவாய் துறையினரால் அளிக்கப்பட்ட, விண்ணப்ப எண் அச்சிடப்பட்டிருக்கும்.
www.eservices.tn.gov.in என்ற, இணையதளத்திற்கு சென்று, 'Know your application status' என்ற பாக்ஸில்,  ஆவணதாரர் தனக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தால், மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிந்து கொள்ளலாம்.
'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் வைத்திருப்பவர்கள், 'Amma eservice of land records' என்ற, செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, தெரிந்து கொள்ளலாம்.
இப்புதிய நடைமுறை, 29.10.2018 ம் தேதி முதல், பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 28.10.2018 

Friday, August 10, 2018

மனைப் பிரிவு ஆவணங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை


மனைப் பிரிவு ஆவணங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை
அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளின் ஆவணங்களைப் பதிவு செய்யும் போது என்ன செய்ய வேண்டும்? என்பது  தொடர்பான புதிய நடைமுறை வரும் 13.08.2018 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது சம்பந்தமாக பதிவுத் துறைத் தலைவர் திரு ஜெ.குமரகுருபரன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை என்னவென்றால்,
கடந்த 20.10.2016-ம் தேதிக்கு முன்பாக வீட்டு மனையாகப் பதிவு செய்யப்பட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மனைகளாகப் பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறையால் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சார்பதிவகத்தின் பதிவு அலுவலர்கள் சரியாகச் செயல்பட்டுள்ளார்களா என்பதைச் சரிபார்த்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் (தணிக்கை) அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த புதிய நடைமுறை எதற்காக?
மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது இரண்டாவது பதிவு போன்ற விவரங்களைச் சரிபார்த்து அனுப்புவது ஒவ்வொரு மாவட்டப் பதிவாளர்களின் கடமை ஆகும். இவ்வாறு சரிபார்ப்பதற்கு மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்ட உத்தரவின் நகலை ஒவ்வொரு சார்பதிவக பதிவு அலுவலரிடம் இருந்தும் மாவட்டப் பதிவாளர்கள் (தணிக்கை) கேட்டுதான் பெற வேண்டியுள்ளது. அந்த நகலை சார்பதிவக பதிவு அலுவலர் அளிக்காமல் போனாலோ அல்லது அவர் வேறு அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாலோ போதிய தகவல்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட மனையையும் அங்கீகரிக்கப்படாத மனையாகக் கருதும் நிலை உருவாகிறது.
இனிமேல் என்ன செய்ய வேண்டும்?
இதனைத் தவிர்ப்பதற்கு மனைகள் குறித்த ஆவணங்களை இனிமேல் பதிவுக்காகத் தாக்கல் செய்யும் போது அங்கீகார உத்தரவு நகல் ஒன்றை ஆவணத்துடன் இணைக்க வேண்டும். இந்த உத்தரவு நகல் பதிவு ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால், அந்த நகலில் சம்பந்தப்பட்ட அனைவரும் கையெழுத்திட வேண்டும். அதேசமயம், அசல் உத்தரவினை ஆவணத்துடன் இணைக்கக் கோரி பதிவு அலுவலர் கட்டாயப்படுத்தக் கூடாது.
இதனால் யாருக்கு என்ன பயன் ஏற்படும்?
உத்தரவின் நகல் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட சொத்தினை வாங்குபவர்களுக்கும், பதிவு அலுவலர்களுக்கும் அது பயனுடையதாக இருக்கும். இப்புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை 13.08.2018 முதல் நடைமுறைக்கு வருகிறது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.08.2018