disalbe Right click

Showing posts with label பதிவுத்துறை. Show all posts
Showing posts with label பதிவுத்துறை. Show all posts

Monday, June 24, 2019

திருமணப் பதிவு - சட்டம் என்ன சொல்கிறது

இந்து மதத்தை சார்ந்த ஆணும், கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுடைய திருமணத்தை எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்?
இந்து திருமணச் சட்டம்
இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெறும் திருமணத்திற்கு மட்டும்தான் இந்து திருமணச் சட்டம் பொருந்தும். இரண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்களுக்கிடையே நடைபெறும் திருமணங்களுக்கு இந்த திருமணச் சட்டம் பொருந்தாது என்று இந்து திருமணச் சட்டம் பிரிவு 2 ல் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து திருமணச் சட்டம் பிரிவு 2(1)(a) ஆனது, இந்து மதத்தை சார்ந்துள்ள ஒரு நபருக்கு தான் பொருந்தும். அந்த இந்து மதம் எந்த முறையில் வளர்ச்சியில் இருந்தாலும் அந்த பிரிவு பொருந்தும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் அல்லது ஜீ மதத்தை சார்ந்தவர்கள் இந்து என்பதிலிருந்து விலக்கப்பட்டு உள்ளார்கள் என்று உட்பிரிவு C ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு இரண்டு இந்துக்களிடையே ஒரு திருமணம் நடைபெற்றிருக்க வேண்டுமென இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 ல் கூறப்பட்டுள்ளது. எனவே இந்து திருமணச் சட்டமானது இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெற்றுள்ள திருமணத்திற்கு தான் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம்
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4 ல் "திருமணம் நடைபெறும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே கிறிஸ்தவராக இருந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தால் மட்டுமே அந்த திருமணம் செல்லும் என்றும், அப்படி இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது என்று" கூறப்பட்டுள்ளது.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4 மற்றும் இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது, குல வழக்கப்படி இரண்டு இந்துக்களிடையே நடைபெற்றுள்ள திருமணத்தை மட்டுமே இந்து திருமணச் சட்டம் செல்லத்தக்கது என்று ஏற்றுக்கொள்கிறது.
இரண்டு சட்டங்களில் எது பொருந்தும்?
திருமணம் செய்து கொள்கிற இரண்டு நபர்களில் ஒருவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்து, மற்றொரு நபர் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இந்து திருமணச் சட்டம் அந்த திருமணத்திற்கு பொருந்தாது. அத்தகைய திருமணத்திற்கு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டமே பொருந்தும்.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு திருமணம் நடைபெறவில்லை என்றால், அந்த திருமணம் இல்லாநிலை திருமணமாக (Void) கருதப்படும். சிறப்பு திருமணச் சட்டத்தை விடவும், மேலோங்கு செயல் திறன் (Over riding Effect) இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்திற்கு அளிக்கப்படவில்லை.
சிறப்பு திருமணச் சட்டம்
சிறப்பு திருமணச் சட்டத்திற்கு அந்த மேலோங்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் பிரிவு 4 ல் சிறப்பு திருமண செய்வதற்கான நடைமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன்படி திருமணம் ஒன்று நிகழ்வதற்கு திருமண தம்பதிகள் இருவரும் அட்டவணை 2 ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் அவர்கள் இருவரும் அல்லது ஒருவர் திருமணத்திற்கு முன் 30 நாட்களுக்கு குறைவில்லாமல் வாழ்ந்த பகுதியைச் சேர்ந்த திருமண பதிவு அலுவலரிடம் திருமணம் பற்றிய அறிவிப்பை எழுத்து மூலம் கொடுக்க வேண்டும்.
திருமண பதிவு அலுவலர் என்ன செய்ய வேண்டும்?
பிரிவு 5 ன் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தும் திருமண அலுவலர் பதிவேட்டுடன் இணைத்து வைக்க வேண்டும். அதோடு அவர் உடனடியாக அந்த அறிவிப்புகள் ஒன்றின் உண்மை நகலை அதற்கென உள்ள திருமண பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். நபர் எவரும் அந்த பதிவேட்டை பார்வையிடுவதற்கு விரும்பும் பொழுது, அதை எல்லா காலங்களிலும் பார்வையிட வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் திருமண பதிவு அலுவலர் அந்த அறிவிப்பு நகல் ஒன்றை அவரது அலுவலகத்தில் வெளிப்படையாக தெரியுமாறு ஒட்டி விளம்பரம் செய்ய வேண்டும்.
திருமணம் செய்து கொள்ள இருக்கும் தரப்பினர்கள் பிரிவு 5 ன் கீழ் அறிவிப்பு கொடுத்த திருமண அலுவலரின் வட்டார எல்லைக்குள் நிலையான குடியிருப்பை கொண்டிராத போது, திருமண அலுவலர், அவ்விருவரும் நிலையான குடியிருப்பை கொண்டிருக்கும் திருமண அலுவலருக்கு அந்த அறிவிப்பினை அனுப்பி வெளிப்படையாக தெரியும் இடத்தில் அதை ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும்.
ஆட்சேபனை யாராவது தெரிவித்தால்?
ஆட்சேபனைகள் ஏதாவது தெரிவிக்கப்பட்டால், அந்த ஆட்சேபனைகளை குறித்து திருமண அலுவலர் முடிவெடுக்க வேண்டும். அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு பிறகு, ஆட்சேபனைகள் ஏதும் இல்லை என்றால் அந்த தம்பதிகளின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் ஒருவேளை ஆட்சேபனை இருந்தால் அது குறித்து திருமண அலுவலர் முடிவு எடுக்கலாம். அந்த முடிவின் மீது தம்பதிகள் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
இதுவே சட்டப்படியான செயலாகும் என்று கீழ்க்கண்ட வழக்கு ஒன்றில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தீர்ப்பை வழங்கியவர்கள் நீதியரசர்கள் திரு. P. R. சிவக்குமார் மற்றும் S. வைத்தியநாதன் ஆகியோர்கள் ஆவார்கள்.
H. C. P. NO - 1722/2015, DT - 18.12.2015
Natarajan Vs Supertendent of police, Pudhukkotai District and Others
(2016-2-MLJ-CRL-27)
நன்றி : வழக்கறிஞர்_D_தங்கத்துரை @ ஹரி அவர்கள், 9894888436. 

Friday, March 22, 2019

கிரைய பத்திரம் பதியும் முன்

கிரைய பத்திரம் பதியும் முன் கவனிக்க வேண்டிய  விஷயங்கள்
ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி இன்னொருவரின் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு அல்லது டைப்பிங் செய்யப்பட்டு சார்பதிவகத்தில் இரண்டு   சாட்சிகள் முன்னிலையில் பதியப்படும்.
1. எழுதி கொடுப்பவரது பெயர் மற்றும் இன்சியலானது, அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என முதலில் பார்க்க வேண்டும். ஆதார் எண், செல்போன் எண் எழுத வேண்டும்.
2.எழுதி வங்குபவரது பெயர் மற்றும் இன்சியலானதுஅவரின் அடையாள அட்டை  மற்றும் ஏனைய ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா?  என்பதையும்  பார்க்க வேண்டும்ஆதார் எண், செல்போன் எண் மற்றும் பக்க எண்கள் எழுத வேண்டும்.
3. ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் (தாய்ப்பத்திரம்) உள்ள எழுதி கொடுப்பவரின்   முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரிகளாக இருந்தால் இரண்டு முகவரிகளையும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
4.  கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது என்பதை பார்க்க வேண்டும்.
⧭  அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி  (சுயசம்பாத்தியம்) இருக்கலாம்.
⧭ அவருடைய பெற்றோர்கள் அல்லது அவருடைய குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
 பிறர் எழுதிய உயில் , பிறர் செய்த தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
 பொது ஏலம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
⧭ பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம்
இதனை கிரயம் எழுதி கொடுப்பவர் ஆவண எண், நாள் & பதிவு அலுவலக விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று தெளிவாக பத்திரத்தில் காட்டி இருக்க வேண்டும்.
5. கிரயம் எழுதி கொடுப்பவர் தனக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்பதையும்   பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் ஆவண எண், நாள் & பதிவு அலுவலக  விவரத்துடன்    தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பு.
6. கிரயத் தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகையை எழுதுங்கள்
7. அக்ரிமெண்ட் போடும்போது எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?, அதில்  எவ்வளவு பணம்   ரொக்கமாக கொடுக்கப்படுகிறது அதில் எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது?, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது?, என்பதை வங்கியின் பெயர் மற்றும் ஊர், காசோலை எண், செலுத்தப்பட்ட அக்கவுண்ட்  எண் மற்றும் பெயர்,  அந்த வங்கியின் பெயர் மற்றும் ஊர்  ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
8.. எழுதி கொடுப்பவர்கிரயம் எழுதி வாங்குபவருக்கு பத்திரத்தில்  
⧪. தானம், ⧪.  அடமானம், ⧪.  முன் கிரயம்,⧪.  முன் அக்ரிமெண்ட்⧪.  உயில்,   ⧪. செட்டில்மெண்ட்,  ⧪.  கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி⧪.  ரெவின்யூ அட்டாச்மெண்ட், ⧪.  வாரிசு பின் தொடர்ச்சி⧪.  மைனர் வியாஜ்ஜியங்கள்⧪. 11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்⧪. சொத்து ஜப்தி⧪. சொத்து ஜாமீன்,   ⧪.  14.பைசலுக்காக   சர்க்கார் கடன்கள்⧪.  வங்கி கடன்கள்⧪. தனியார் கடன்கள்⧪. சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை⧪. சிவில், கிரிமினல் வழக்குகள்⧪. சர்க்கார் நில ஆர்ஜிதம்⧪. நிலகட்டுப்பாடு⧪. அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்⧪. நில உச்ச வரம்பு கட்டுப்பாடு⧪. பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை, ⧪.   இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை! ⧪. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று⧪. சொத்து   சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன்
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும். (ஆனால், மேற்கண்ட விபரங்களை யாரும் எழுதுவதே இல்லை. இந்த சொத்தில் எந்தவிதமான வில்லங்கமும் இல்லை. அப்படி ஏதாவது வில்லங்கம் வந்தால், அதனை எனது சொந்தச் செலவில் தீர்த்து வைப்பேன்! என்று மட்டும் எழுதி விற்பவரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார்கள்)
9. தபசில் சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். ஆகியவற்றை தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
10. இடம் அல்லது கட்டிடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் இருத்தல் நல்லது. மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு அது உதவியாக இருக்கும் .
11.. வாங்குகின்ற கிரைய சொத்தை சுற்றி இருக்கின்ற நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
12. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் (விற்பவர்) கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் (விற்பவர்) தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
13. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எழுதி கொடுப்பவர் (விற்பவர்) கையொப்பம் இட்டு இருக்கிறார்களா   என்று பார்க்க வேண்டும்.
14. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ?, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுக்கப்பட்டுள்ளதா?, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல், ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா? அவர்களது உரிமம் எண் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 23.03.2019