disalbe Right click

Showing posts with label வழக்கறிஞர். Show all posts
Showing posts with label வழக்கறிஞர். Show all posts

Sunday, December 31, 2017

வழக்கறிஞர்கள் அடையாள அட்டை


நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இனி 'வக்காலத்து' படிவத்துடன், புகைப்படத்துடன் கூடிய தங்களின் அடையாள அட்டை நகலையும்,  தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வைத்தியநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நீதிமன்ற பதிவுத்துறை கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
இந்த உத்தரவு, 02.01.2018 முதல் அமலுக்கு வருகிறது.
💬 வக்காலத்து படிவத்துடன், வழக்கறிஞரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை வழக்கறிஞர்கள் அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும்.
💬 அடையாள அட்டை இல்லாதவர்கள், பார் கவுன்சிலில் இருந்து பெற வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் இல்லாமல், இனி வழக்கறிஞர்களின் வக்காலத்து படிவம் ஏற்கப்படாது.
💬வக்காலத்து படிவத்தை, சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டை நகலையும், தாக்கல் செய்ய வேண்டும்
💬  இருப்பிட முகவரியுடன், படிவத்தை தாக்கல் செய்யும் வழக்கறிஞர் மற்றும் சான்றொப்பம் செய்யும் வழக்கறிஞர் ஆகியோர்களின் அலுவலக முகவரியையும் அளிக்க வேண்டும்
💬 குற்றவியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில், வழக்கறிஞரின்  பார் கவுன்சில் பதிவு எண்ணை குறிப்பிட்டு, அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டும். இதில் சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், சரிபார்த்து கொள்ளலாம்
💬 அடையாள அட்டையை சரிபார்க்க, நீதிமன்றம் அல்லது பதிவுத்துறை கோரினால், அசல் அடையாள அட்டையை, வழக்கறிஞர்கள் அளிக்க வேண்டும்உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், ஆர்.சக்திவேல்,  அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.2017 

Friday, December 29, 2017

மனுதாக்கல் செய்ய அடையாள அட்டை

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலியான வழக்கறிஞர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து களைவதற்காக சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. போலி வழக்கறிஞர்களை கண்டுபிடித்து அவர்களை களைவதற்கு வழக்கறிஞர் சங்கங்களும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அடையாள அட்டை
தங்களுக்கான அடையாள அட்டையை பார் கவுன்சலில் இருந்து பெற்று, அதன் நகலை இணைத்து வழக்குகளை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2ம் தேதிக்குள் இது நடைமுறைக்கு வரவேண்டும். இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கையாக நீதிமன்ற பதிவாளர் அனுப்பவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.12.2017

Monday, December 11, 2017

நீதிமன்றங்களை, தவறாக வழி நடத்தும் வழக்கறிஞர்கள்

 
சென்னை:நீதிமன்றங்களை, தவறாக வழி நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ஆனந்த் குமார் ஜவஹர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தி.நகர், ரங்கநாதன் தெருவில், நானும், வி.எஸ். ஜெயராஜன் என்பவரும் பங்குதாரர்களாக, வாடகை கட்டடத்தில் துணிக்கடை நடத்தினோம். அந்த கட்டடம், சாந்தி மீனாட்சி என்பவருக்குச் சொந்தமானது. இடையில், எனக்கும், ஜெயராஜனுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், கடை ஆறு மாதங்களாக மூடி கிடப்பது போல சித்தரித்து, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் மற்றும் லோக் அதாலத் நீதிமன்றங்களை, வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் திட்டமிட்டு ஏமாற்றி, என்னை கடையில் இருந்து வெளியேற்றினர்.
அந்த சம்பவங்கள் அனைத்தும், கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கடையை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்பதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். பணத்துக்கு ஆசைப்பட்டு, நீதிமன்ற ஊழியர்களும், தவறான வழியில் சென்றுள்ளனர். அதனால், மாம்பலம் போலீஸ் துணை கமிஷனர், உடனடியாக அந்த கடையை மீட்டு, ஆனந்த் குமார் ஜவஹரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல், ஜெயராஜன், சாந்தி மீனாட்சி ஆகியோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவுத்துறை சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றங்களை தவறாக வழிநடத்தி, பெறப்பட்ட அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நீதிமன்றங்களை தவறாக பயன்படுத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, ஏற்கனவே, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
நீதிமன்றத்தை ஏமாற்றியவர்கள் மீது, நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, தலைமை வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நன்றி : தினமலர் நாளிதழ் - 10.12.2016   

Thursday, October 12, 2017

‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து வழங்க புதிய விதிமுறைகள்

மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்க புதிய விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்க நேர்காணல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை மறைமுகமாக நடந்து வந்தமூத்த வழக்கறிஞர்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்குமூத்த வழக்கறிஞர்அந்தஸ்து கிடைப்பது கவுரவமாக கருதப்படுகிறது. இந்த அந்தஸ்து பெறும் வழக்கறிஞர்கள் சிறப்பு உடை அணியவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மூத்த நீதிபதிகள் ரகசியமாக இந்த அந்தஸ்தை வழங்கி வந்தனர். இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கடந்த சுதந்திர தினம் முதல் தனது மூத்த வழக்கறிஞர் உடையை தவிர்த்து வருகிறார். மூத்த வழக்கறிஞர் தேர்வு முறையில் பாரபட்சம் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த நடைமுறைக்கு எதிராக பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.
இம்மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ரோஹின்டன் எப்.நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்திரா ஜெய்சிங் வாதிடும்போது, ‘‘மூத்த வழக்கறிஞர் தேர்வு முறை பாரபட்சமாக உள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அமெரிக்காவில் சீனியர், ஜூனியர் என்ற நடைமுறை இல்லை. இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது’’ என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில், ‘மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து என்பது அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14- மீறவில்லைஎன்று வாதிடப்பட்டது.
தனிச் செயலகம்
இருதரப்பையும் கேட்டறிந்த நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
 மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்க தனிச் செயலகம் உருவாக்கப்படும்
 உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களாக இருந்தால் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதி ஒருவர், வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி மற்றும் அட்டர்னி ஜெனரல் அடங்கிய குழு தகுதியுடையவர்களை தேர்வு செய்யும்
 உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக இருந்தால், இக்குழுவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அட்டர்னி ஜெனரலுக்கு பதிலாக அட்வகேட் ஜெனரல் இடம்பெறுவார். அவர்கள் தகுதியுடைய வழக்கறிஞர்கள் பட்டியலை தயாரித்து இணையதளத்தில் வெளியிடுவார்கள். அதில் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்
 வழக்கறிஞராக பணியாற்றிய ஆண்டுகள் - 20 மதிப்பெண், பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் ஆஜராகி தீர்ப்பு பெற்றது - 40 மதிப்பெண், சட்ட பிரசுரங்கள் - 15 மதிப்பெண், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்துக்கான தகுதி, நேர்காணல் - 25 மதிப்பெண் ஆகியவற்றை கணக்கில் கொண்டுமூத்த வழக்கறிஞர்அந்தஸ்துக்கு பரிந்துரை செய்யப்படுவர்
 இந்த பரிந்துரை அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக வைக்கப்படும்
 ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் நீதிபதிகள் முடிவு எடுப்பார்கள். பின்னர், ‘மூத்த வழக்கறிஞர்அந்தஸ்து வழங்கப்படும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் ரகசியமாக நடந்து வந்தமூத்த வழக்கறிஞர்தேர்வு முறை முடிவுக்கு வந்துள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 13.10.2017