disalbe Right click

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-5


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி - 5
**************************************************************************

வெளிநாடு வாழ்க்கை முடிந்து, முடிவாக இந்தியா வந்து நிரந்தரமாக தங்குவதாக இருந்தால், வ்ங்கியுடன் தொடர்பு கொண்டு மேற்கண்ட அயல்நாடு வாழ் இந்தியருக்கான வங்கிக் கணக்கை, ORDINARY ACCOUNT ஆக மாற்றிக் கொள்ளலாம்.


வங்கிகள் RESERVE BANK OF INDIA- விற்கு இதனை தெரியப்படுத்தி விடும்.

மேலும் தற்போது 'SPEED CASH'- எனப்படும் உடனடியாக பணம் அனுப்பும் வசதியும் தற்போது உள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது வெளிநாட்டு வங்கிகளில் 'speed cash' முறையில் அனுப்பிய பணத்தை இந்தியாவில் WESTERN UNION MONEY TRANSFER' மூலம் நமது தபால் நிலையங்களிலோ அல்லது இதனுடைய ஏஜெண்ட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் பணம் அனுப்பிய ரசீது-வில ஒரு அடையாள எண் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்திய தபால் நிலையத்தில் எந்த ஊரிலும் மற்றும் 'WESTERN UNION MONEY TRANSFER'-ஏஜெண்டுகளிடமும் யார் பெயருக்கு பணம் அனுப்புகிறோமோ - அவருடைய அடையாள அட்டையைக் காண்பித்து உடன் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு கால  தாமதம் ஏற்படாமல் அவசர தேவைக்கு பணம் பெற முடியும்.

ரூ.50,000-க்கு கீழ் தான் பணம் அனுப்ப முடியும். வங்கிக் கணக்கு மூலம் அனுப்பும் பணத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

விடுமுறையில் இந்தியா வரும்போது கடவுச் சீட்டு மற்றும் விமான பயணச் சீட்டில் கவனிக்க வேண்டியை.

நம் கடவுச் சீட்டில் இந்தியா வரும்போது, நிறுவனமானது இரண்டு வகையான விசாக்களை உபயோகித்து நம்மை அனுப்பலாம்.

ஒன்று, நிறுவனம் நம்மை தொடர்ந்து பணி செய்ய அனுமதித்தால் EXIT-RE-ENTRY விசாவை உபயோகித்து நம்மை விடுமுறையில் அனுப்புவார்கள்.

அதாவது EXIT - என்றால  இந்தியா செல்லவும், RE-ENTRY என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், விசா தேதி - கெடு முடிவதற்கு முன் - நாம் பணிபுரியும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.

இதில் சிறு கால தாமதம் ஏற்பட்டால் கூட நம்மை நாம் பணிபுரியும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.


பணி ஒப்பந்தம் முடித்து EXIT-ல் வரும் போது கவனிக்க வேண்டியது;

இரண்டு வருடமோ அல்லது அதற்கு மேலோ உங்களுடைய தேவையில்லை என திருப்பி அனுப்புகிறது என வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கடவுச் சீட்டில் EXIT-முத்திரை இடப்பட்டு இந்தியாவுக்கு வருகிறீர்கள்.

நீங்கள் என்ன என்ன பொருட்கள் கொண்டு வரலாம் என்பதை 'INDIA CUSTOMS RULES FOR TRANSFERRING RESIDENCY TO INDIA'-என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


நாம் வெளிநாட்டில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்களை 'கார்கோ' (Cargo) மூலம் இந்தியா கொண்டு வரலாம். இதற்கு கஸ்டம்ஸ் DUTY கிடையாது.

மற்றும் நீங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் போது விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்று மறுபடியும் அதை இந்தியா கொண்டு வர விரும்பினால், மறக்காமல் அந்த பொருட்களுக்கான EXPORT CERTIFICARE'-ஐ கஸ்டம்ஸ்-லிருந்து பெற்றுச் செல்லவேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் இந்தியா திரும்பும்போது அந்த பொருட்களுக்கு திரும்பவும் DUTY கட்ட வேண்டி வரும்.

PRAVASI BHARTIYA BIMA YOJANA, 2006

குறிப்பாக வேலை வாய்ப்புக்காக அயல் நாடு செல்லும் இந்தியர்களுக்காக கட்டாய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (INSURANCE) அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

அதன் பெயர் 'பிரவசி பாரதிய பீமா யோஜனா' என்பதாகும். (PRAVASI BHARATIYA BIMA YOJANA) (PBBY)

குறைந்தபட்ச தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் நாம் வேலை ஒப்பந்தம் செய்த காலம் முழுவதற்கும் சேர்த்து பயன் பெறலாம்.

2003ஆம் ஆண்டு இந்தத் தொகை ரூ.2 லட்சமாக இருந்தது. பிப்ரவரி 1, 2006 முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது.

இத்துடன் ரூ.25,000-க்கும் சேர்த்து கூடுதலாக சட்ட உதவி செலவுகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் என்ன நன்மைகள் :


1) ஒரு வேளை காப்பீடு செய்தவர் இறந்து விட்டால், அவர் குறிப்பிட்ட நபருக்கு (NOMINEE) ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். அல்லது காப்பீடு செய்தவர் பணியின்போது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் காப்பீடு நிறுவனம் அவருக்கு குறிப்பிட்ட பணம் கிடைக்கும்.

2) இறந்தவர் உடலை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டுவர ஒரு வழி வான ஊர்தி செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். உடலுடன் உதவியாளர் ஒருவருக்கும் வரும் செலவை நிறுவனம் ஏற்கும்.

3) பணியில் இருப்பவரை அவர் எந்த தவறும் செய்யாத பட்சத்தில், பணியிலிருந்து வெளியேற்றப்பட்டால், ஒரு வழிப்பாதை எகானமி பிரிவு விமான பயணச்சீட்டுக்கான தொகையை காப்பீடு செய்தவர், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு அந்நாட்டின் இந்தியத் தூதரக சான்றிதழ் தேவை.

4) பணியில் இருக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது மருத்துவ சோதனையில் அவரால் இனி பணியில் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டாலோ மற்றும் காப்பீடு எடுத்த 12 மாதத்திற்குள் வெளிநாட்டு பணி நிறுவனம் பணி நீக்கம் செய்தாலோ, மேற்கண்ட ஒரு வழிப் பயணச்சீட்டு காப்பீட்டு நிறுவனம் காப்பீடு செய்தவருக்கு வழங்கும்.

5) இந்த காப்பீடு குறைந்தது இரண்டு வருடம் அல்லது வேலை ஒப்பந்தம் காலக்கெடு இதில் எது அதிகமோ அதுவரை செல்லுவடியாகும்.

6) பணியின்போது விபத்து, உடல் நலக்குறைவு, வியாதி இவற்றுக்காக மருத்துவமனையில், மருத்துவம் எடுத்துக் கொண்டால், மருத்துவத் தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 50,000/- காப்பீட்டு காலத்தில் இந்தியாவில் இருந்தாலும், அயல் நாட்டில் இருந்தாலும் காப்பீடு செய்தவருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

7) வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ பேறுக்காக ரூபாய் இருபதாயிரம் (20,000) காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இதற்கும் அந்நாட்டு இந்திய தூதரக சான்றிதழ் தேவை.

8) வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு (21 வயதிற்குள்) மருத்துவச் செலவுகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 25,000 (இருபத்தைந்தாயிரம்) பெற்றுக் கொள்ளலாம். 
இறந்தவர் அல்லது நிரந்திர ஊனமுற்று இந்தியா திரும்பிய பணியாளர், காப்பீடு செய்தவருக்குத்தான் மேற்கண்ட சலுகை கிடைக்கும்.

காப்பீட்டு நிறுவனங்கள் எவை :

1) ஐசிஐசிஐ லம்போர்டு இன்சூரன்ஸ் கம்பெனி
2) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
3) ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி
4) நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
5) ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
6) நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி
7) சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
8) பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி

மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன் பெறலாம்.

                                                                                                                                      -இன்னும் இருக்கிறது-
நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-4


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-4  
****************************************************************************

பிறகு அதை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் வெளிநாட்டு வங்கியில் காசோலை மற்றும் கடவுச் சீட்டு, விசா, work permit நகல் இவற்றை புகைப்படத்துடன் இணைத்து வங்கிக்கு அனுப்பினால், வங்கியிலிருந்து உங்கள் முகவரிக்கு வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம் வந்து விடும்.

நீங்கள் மாதா மாதம் அனுப்பும் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும்.

உங்கள் குடும்பத்திற்குத் தேவையான பணத்தை செக் அனுப்பினால் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

நீங்கள் வங்கி மூலம் அனுப்பும் பணம் அனைத்தும் ரிசர்வ் பேங்க் கண்காணிப்பில் தான் உங்கள் வங்கிக்குச் செல்கிறது.

அதற்குண்டான அந்நியச் செலாவணி நம் அரசுக்குக் கிடைக்கிறது.

எனவே தான் வெளிநாடு வாழ் இந்தியருக்கு இந்திய அரசு பல  சலுகைகளை அறிவிக்கிறது.

நாம் எவ்வளவு காலம் வெளிநாட்டில் பணி செய்து சம்பாதிப்பது என்பது முக்கியமல்ல.

சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் சேமித்து, பயனுள்ள பிற்கால  வாழ்விற்கு செலவு செய்யவேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியருக்காக மூன்று வகையான வங்கிக் கணக்குகளை துவக்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

1) NON-RESIDENT (EXTERNAL) RUPEE ACCOUNTS (NRE ACCOUNTS)


மேற்கண்ட வங்கிக் கணக்கில் வெளிநாட்டு நாணயத்தை ரூபாயாக மாற்றி நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதிலும் (சேவிங்ஸ்) சேமிப்பு, (கரண்ட்) நடைமுறை மற்றும் வைப்புத் தொகை கணக்குகளை வைத்துக் கொள்ளலாம்.

நாம் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.

மேலும் இந்த வங்கிக் கணக்கை, வெளிநாட்டு நாணய கணக்காக (FCNR) (FOREIGN CURRENCY NON-RESIDENT ACCOUNTS) மாற்ற வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

2) ORDINARY NON-RESIDENT ACCOUNTS (NRO ACCOUNTS)

இந்த வங்கிக் கணக்கிலும் இந்திய ரூபாயாக வரவு வைக்கப்படும். இந்தியாவில் வாழும் ஒருவருடன் சேர்த்து கூட்டு (JOINT ACCOUNT) கணக்காக வைத்துக் கொள்ளலாம்.

இந்த கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு வரும் வட்டியானது வரிக்கு உட்பட்டது. NRO ACCOUNT கணக்கில் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.


3) FOREIGN CURRENCY NON RESIDENT (BANK) ACCOUNTS. (FCNR (B)ACCOUNTS)

இந்த வங்கிக் கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து இந்திய ரூபாயாக மாற்றி அனுப்ப முடியாது.

வெளிநாட்டு நாணயங்களான யு எஸ் டாலர்கள், ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ், ஜப்பானிய யென், யூரோ, கனடா டாலர்கள் மற்றும் ஆஸ்திரேலியா டாலர்களாக மட்டும் அனுப்ப முடிகிற வங்கிக் கணக்காகும் இது.

தற்போது ரிசர்வ் வங்கி ஐந்து வருடங்கள் வரையிலான வைப்புத் தொகையாக இந்த கணக்கில் அனுமதிக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியருக்கான தகுதி உள்ள வரை இந்த கணக்கில் வைத்துள்ள தொகையின் வட்டிக்கு வரி கிடையாது.
                                                                                                                                         -இன்னும் இருக்கிறது-

நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-3



வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-3
**********************************************************************************************

8) கடவுச் சீட்டில் விசா பதிவாகும் முறை:


நம்மை தேர்வு செய்த நிறுவனம், வேலை வாய்ப்பு நிறுவனம் நிர்வாகிகளிடமும் நமக்குரிய விசாவை கொடுத்து இருப்பார்கள். தொழில் விசாவில் இரு வகை உண்டு.

1) தனி விசா (INDIVIDUAL VISA)

2) கூட்டு விசா (GROUP VISA)

உதாரணமாக மின்-பணியாளர் பத்து பேர் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்பட்டால் ஒரே விசாவில் பத்து பேருக்கும் சேர்த்து இருக்கும்.

பத்து மின்-பணியாளர் தேர்வு செய்தவுடன், பத்து பேரின் கடவுச் சீட்டு, புகைப்படம், சான்றிதழ் இவற்றுடன் குரூப் விசாவையும் சேர்த்து, எந்த நாட்டிற்குச் செல்கிறோமோ, அந்நாட்டின் தூதரக அலுவலகம் உள்ள மும்பை, சென்னை, புதுதில்லி - இவற்றில் ஒரு இடத்தில் கொடுத்து கடவுச் சீட்டில் பதிவு செய்வார்கள்.

கடவுச் சீட்டில், விசா பதிவு செய்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் வெளிநாடு சென்றுவிடவேண்டும்.

விசா தயாரானவுடன் வேலை வாய்ப்பு நிறுவனம் நம்மை தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல நம்மை அழைப்பார்கள்.

பிறகு விமான பயணச் சீட்டையும், புறப்படும் தேதியையும் உறுதி செய்வார்கள்.

அந்த நாளையும் நமக்குத் தெரியப்படுத்தி, முதல் நாளே சென்னை வந்து கடவுச்சீட்டையும். விமானப் பயணச் சீட்டையும் நம்மிடம் கொடுப்பார்கள்.

(9) எந்த விமான நிலயைத்தில் இறங்கவேண்டும்? யார் அழைத்துச் செல்வது: 

மறக்காமல் தங்களுடைய பணிக்கான தொகையையும் பெற்றுக் கொண்டுதான் மேற்கண்டவை நமக்கு கிடைக்கும்.

இங்கு முக்கியமாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகை (SERVICE CHARGE) பற்றியது. 

ஒருசில நிறுவனங்களை விட, மற்ற நிறுவனங்கள் வாங்கும் தொகை மிக அதிகம்.

இந்த விசயத்தில் அரசு தலையிட்டு, நிறுவனங்கள் வாங்கும் தொகையை முறைப்படுத்த வேண்டும்.

இதில் அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகையைப் பின்பற்றலாம்.

விமான நிலையத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் வெளிநாடு செல்லும் நாளும் வந்து விட்டது. பன்னாட்டு விமான நிலையத்திற்கு, விமான பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும், விமான புறப்பாடு நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக (REPORTING TIME) சென்று தகவல் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் பயணம் செல்வது உறுதி செய்யப்படும்.

(10) இமிக்ரேஷன் பகுதியில் உங்கள் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் கொடுத்தவுடன், உங்களின் கடவுச்சீட்டு சரி பார்க்கப்பட்டு (IMMIGRATION CLEARANCE), உங்களுக்கு BOARDING PASS தருவார்கள்.

அத்துடன் இமிக்ரேசன் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யவேண்டும் என்பார்கள்.

உங்களால் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொடுத்து நிரப்ப வேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை விமான ஊர்திக்குள் உள்ளே செல்லும்போது விமான ஊழியர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

விமான இருக்கையில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு பட்டையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் உங்களுக்குத் தேவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம்.

இப்போது நாம் எந்த இடத்தில் பறந்து கொண்டு உள்ளோம் என்ற விவரம் நம் முன் உள்ள திரையில் காணலாம்.

நாம் சேருமிடம் வந்துவிட்டோ ம்.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன், வரிசையாக நின்று, இமிக்ரேசன் முடித்து, நமது கடவுச் சீட்டில் அந்நாட்டில் வந்து சேர்ந்ததற்கான முத்திரை குத்தப்பட்டு நம்மிடம் தருவார்கள்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டீர்கள்.

உங்களுக்காக நீங்கள் பணி செய்யப்போகும் நிறுவனம் அனுப்பிய பிரதிநிதி கையில் நிறுவனப் பெயர் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் காத்திருப்பார்.

(11) அந்த  நிறுவனத்தின் பிரதிநிதி வரவில்லை! என்றால்? 

இங்கு ஒருமுறை எனக்கு நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வளைகுடா நாடுகளில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை விடுமுறை நாட்கள்.

நான் சவூதி அரேபியா சென்று இறங்கியது வெள்ளிக்கிழமை மாலை 7 மணி. அன்று விடுமுறை என்பதால் என்னை அழைத்துச் செல்லும் நபர் விமான நிலையத்திற்கு வரவில்லை.

தொலைபேசியில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. என்ன செய்வது?

விமான நிலையத்தின் வெளியே சுற்றும் முற்றும் பார்த்தேன். மொழி வேறு தெரியாது.

அப்போது நான்கு தமிழ் அன்பர்கள் வாடகை வண்டியை அணுகி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று என் நிலையை விளக்கினேன்.

அன்பர் ஒருவர், 'அதற்கென்ன இன்று இரவு எங்கள் அறையில் தங்கி விட்டு, காலையில் நீங்கள் செல்லும் இடத்திற்கு வண்டி பிடித்து அனுப்புகிறோம்' - என்றார்.

அப்போது தான் எனக்கு தெம்பு வந்தது.

இரவு சாப்பாடு கொடுத்து, காலை வாடகை வண்டி பிடித்து, நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பினார்கள்.

(12) நண்பர்களுக்கு என் நன்றி!

இதைப் போல் உங்களுக்கு ஒரு நிலைமை என்றால், மேற்கண்டபடி நீங்களும் சமாளிக்க வேண்டியது தான்!

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன், அங்கும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு உங்களை அனுப்புவார்கள். அந்த மருத்துவச் சான்றிதழ், நிறுவன கடிதம், கடவுச் சீட்டு இவற்றை இணைத்து 'WORK PERMIT' - பெற அனுப்புவார்கள்.

'WORK PERMIT' - கிடைத்தவுடன் அதில் எத்தனை வருடத்திற்கு அனுமதி உள்ளதோ அதுவரை அந்நாட்டில் பணிபுரியலாம்.

நிறுவனம், தேவைப்பட்டால் மறுபடியும் 'work permit'- ஐ புதுப்பித்துக் கொள்ளும்.

நீங்கள் எங்கு வெளியே சென்றாலும், கண்டிப்பாக உங்கள் வசம் 'WORK PERMIT' வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொன்று, மீண்டும் ஒரு பணி ஒப்பந்தம் கொடுத்து கையொப்பம் இடச் செய்வார்கள்.

ஏற்கனவே, நீங்கள் நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் பேசிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அடங்களி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருப்பீர்கள்.

அதனுடைய நகலை மறக்காமல் கைவசம் வைத்திருந்து, பணியில் சேர்ந்தவுடன் கொடுக்கும் ஒப்பந்த பத்திரத்துடன் சோதித்து பார்த்து ஏதாவது வேறுபாடு உள்ளதா என பார்க்க வேண்டும்.


(13)  பேசிய சம்பளத்திற்கு குறைவாக இரண்டாவது ஒப்பந்தத்தில் இருந்தால்?

ஒப்பந்தம் சரி செய்தால் ஒழிய, நீங்கள் கையொப்பம் இடக்கூடாது.

இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன் உங்கள் பெயர், அப்பா பெயர், இந்திய விலாசம், தற்போதைய நிறுவனத்தின் விலாசம், வேலையின் பெயர், கடவுச் சீட்டு எண், கடவுச் சீட்டின் நகல் ஆகியவற்றை மெயில் மூலமாகவோ அல்லது தொலை நகல் மூலமோ இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்திய தூதரகத்தின் விலாசத்தை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களைப் பற்றிய குறிப்புகளை தூதரகத்தில் பதிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பணிபுரியும் நாட்டில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உங்கள் கடவுச் சீட்டை புதுப்பிக்க மற்றும் விசா பற்றிய சந்தேகங்களும் நிவரத்தி செய்வார்கள். உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தூதரகங்கள் மூலம் முகாம் நடத்துவார்கள்.
                                                                                                                              -இன்னும் இருக்கிறது-

நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு