disalbe Right click

Wednesday, June 27, 2018

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..!

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..!
நலம் நல்லது-52
டாலர் மதிப்பு சரிந்தாலும், .டி.எம் வாசல்களில் வரிசையில் நிற்பது தொடர்ந்தாலும் ஆண்டுக்கு 20 சதவிகித வியாபார வளர்ச்சியுடன் கொடிகட்டிப் பறக்கிறது அரசு நடத்தும் மது வணிகம்... டாஸ்மாக்
குடிப்பவர்களில் 40-50 சதவிகிதம் பேர்களை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிமைகளாக மாற்றிவரும் இந்தத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான், அரசு பல நலத் திட்டங்களை நடத்துவதாகச் சொல்கிறது. இந்த அவலம், உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
கொஞ்சமாக் குடிச்சா தப்பில்லையாமே...’, 
`இதயத்துக்கு நல்லதாமே...’, 
`ஹார்ட் அட்டாக் வராதாமே...’, 
`கொஞ்சமே கொஞ்சமா ஆல்கஹால் இருக்கும் பீர், ஒயின் சாபிடலாம்ல?’... 
என சப்பைக்கட்டு கட்டி ஆல்கஹால் சுவைக்கும் சகோதர-சகோதரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி... ஆல்கஹால் விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி போன்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் `பெக்கணக்கு, 6.8 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள பீர்/ஒயின் என்றால் `மக்கணக்கு... இதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்தும் எந்த வித்தியாசமும் இல்லை.
`திராட்சை ஒயினில் நிறைய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாமேஎன படித்தவர்கள்கூட சில வாதத்தை முன்வைப்பார்கள். சில உணவியல் வல்லுநர்கள் இதை ஆதரிக்கவும் செய்யலாம். ஆனால், அவர்களுக்கு எல்லாம் அதே பாலிஃபீனால்கள் பச்சைத் தேயிலையில் இருந்து கத்திரிக்காய் வரைக்கும் எத்தனையோ பொருட்களில் இருக்கிறது என்பதும் தெரியும்தானே? அதற்கெல்லாம் குரல் கொடுக்காதவர்கள், ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கறையா காரணம்?
ஒயினை உணவுப் பட்டியலோடு சேர்க்க வேண்டும். உயர்தர சைவ உணவகம் தொடங்கி, கையேந்தி பவன் வரைக்கும் அனைத்து உணவகங்களிலும் அதை வழங்க அனுமதி வேண்டும்என ஒரு பெரும் வணிகக் கூட்டம் தொடர்ந்து அரசை வற்புறுத்திவருகிறது. அதாவது, பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தால், குடும்பத்தோடு குடிக்கவைத்து, மாதாந்திர மளிகைக்கடைப் பட்டியலில் ஒயினையும் இடம்பெறச் செய்யலாம் என்கிற சந்தை உத்தி. அது சரிதான் என்பதுபோல நகர்ப்புற இளம் பெண்களில் குடிப்பழக்கம் கணிசமாகப் பெருகிவருவதும் வருத்தம்தரக்கூடிய ஒன்று. ஆண்களைவிட பெண்களுக்கு மதுவினால் வரும் நோய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்.
`கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் ஈரல் சிர்ரோசிஸ் (Liver Cirrhosis) நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்என்கிறது சமீபத்திய நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம். இதற்கு முக்கியக் காரணம் குடி. சில பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஈரல் (கல்லீரல்) துறைக்காகத் தனிப் பிரிவுகளையே உருவாக்கிவைத்திருக்கின்றன. ஏனெனில், ஈரல் பாதிப்படைந்தவர்களில் சரி பாதிப்பேர் ஈரல் புற்றுநோய்க்கும் ஆளாவார்களாம். தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சிர்ரோசிஸ் நோய்க்கு `காத்திருப்பு நிலையில் உள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் குடிப் பழக்கம் உள்ளவராக இருப்பதால், உங்கள் பிள்ளை ஈரல் வியாதியாலோ அல்லது வேறு புற்றுநோய்க்கோ அல்லது சர்க்கரை முதலான பல வியாதிகளுக்கோ ஆளாகலாம்என எச்சரிக்கிறது எபிஜெனிடிக்ஸ் (Epigenetics) துறையின் ஆய்வு ஒன்று. குடி போதையில் ஒரு நபர் தள்ளாடுவதுபோல, அந்த நபரின் மரபணுக்களும் தள்ளாடி, மரபணுத் தகவல்களை மிகத் துல்லியமாகப் பிரதியெடுக்கவேண்டிய பணியை மறந்துவிடுகின்றன. தன் செல்களைப் படியெடுக்கும்போது, சந்திப் பிழை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைப்பதற்கு மறந்ததில் `டி.என். டிமெத்திலேஷன் (DNA Demonetization) நடந்து, அது குடித்தவருக்கோ, குடித்தவரின் பிள்ளைகளுக்கோ சிர்ரோசிஸ் முதல் பல வியாதிகளை வரவழைக்கக்கூடும்என்கிறது எபிஜெனிடிக்ஸ் துறை ஆய்வு.
சங்ககாலத்திலேயே கள் அருந்தியிருக்கிறார்களே!’ எனச் சிலர் கேட்கலாம். கள் வேறு; எத்தனால் கலந்து விற்கப்படும் சாராயம் வேறு. கள்ளைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். அதற்காக அந்த காலக் கள் குடிக்கலாமா என நினைப்பதும் தவறு. சங்க காலத்தில் கல் தூக்கி, காதலித்து, குமரியில் இருந்து மதுரைக்கு குதிரையில் பயணிக்க உடல் வலிமை தேவையாக இருந்தது. இப்போது பஸ்ஸில் போகவே, `ஸ்லீப்பர் ஸீட் இருக்கா?’ எனக் கேட்கும், சொகுசு தேடுபவர்களுக்கு கள் அவசியமே இல்லை.
இன்றைக்கு, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு ஆகும் செலவு பல லட்ச ரூபாய். பழுதடைந்த ஈரலைப் பராமரிக்க ஆகும் செலவு பல பத்தாயிரங்கள். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி, மரணத் தறுவாயில் பெரிய மருத்துவமனைக்குள் நுழையவே முடியாத பாமர, ஏழை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம். எனவே நினைவில் கொள்வோம்... 
குடி குடியை மட்டுமல்ல... குலத்தையே கெடுக்கும்!
நன்றி : விகடன் செய்திகள் - 18.01.201

Tuesday, June 26, 2018

பாஸ்போர்ட் சேவா' செயலி

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பெயர் 'பாஸ்போர்ட் சேவா' ஆகும். 
இந்த சேவையை https://portal2.passportindia.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
வெளிநாடு செல்ல விரும்புவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள்  அதிகமாக உள்ளது
மாநிலங்களில் ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால், நீண்ட தூரம் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதுள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும்  மொபைல் ஆப் மூலமாக நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் வழக்கமான சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய நடைமுறையின் மூலம் பாஸ்போர்ட் பெறுவது மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும்.
திருமணம் ஆன பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் திருமணம் ஆன பெண்கள் இனி திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை என்ற ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.06.2018 

Monday, June 25, 2018

பத்திரப்பதிவு - அசல் ஆவணம் தேவையில்லை - எப்போது?

பத்திரப்பதிவு - அசல் ஆவணம் தேவையில்லை - எப்போது?
பத்திரப் பதிவில் செய்யப்படுகின்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் கடந்த 07.06.2018 அன்று பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில் பத்திரப்பதிவு செய்யும் போது அந்த சொத்துக்குரிய முன்பதிவு அசல் ஆவணங்களை பதிவு அலுவலரிடம் கண்டிப்பாக சொத்தின் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்றும், அதனை பதிவாளர்கள் ஸ்கேன் செய்து பரிசீலிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தார். 
இது 11.06.2018ல் இருந்து அமுல்படுத்தப்பட்டது.
பொது மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் அறிவிப்பினால் பொதுமக்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க மீண்டும் ஒரு கடிதத்தை பத்திர பதிவு அலுவலகங்களுக்கு கடந்த 13.06.2018 அன்று  பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். பொதுமக்களுக்கு இருந்த சிக்கல்கள் இதனால் தீர்க்கப்பட்டுள்ளது.
அந்தக் கடித நகல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.06.2018 

Saturday, June 16, 2018

SELVAMPALANISAMY

சட்டம், மருத்துவம், கல்வி மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றிய பயனுள்ள பல பதிவுகள்!
வருகை தாருங்கள், அன்புடன் அழைக்கிறேன்!
www.selvampalanisamy.com

காவல்துறையினரின் புலன் விசாரணையைப் பற்றி

காவல்துறையினரின் புலன் விசாரணையைப் பற்றி....
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
நம் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது  மற்றும் குற்றம் செய்தவர்களை உரிய நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் ஒப்படைத்து, அவர்களுக்கு தண்டணை வாங்கித் தருவது போன்றவை  காவல்துறையினரின் பணிகள் ஆகும். 
நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகின்ற வழக்குகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கும் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
புலன் விசாரணை
ஒரு வழக்கில் சாட்சிகளையும், சாட்சியங்களையும் திரட்டுவதற்காக ஒரு காவல் அதிகாரியோ அல்லது இது சம்பந்தமாக நீதித்துறை நடுவர் ஒருவர் மூலம் அதிகாரம் பெற்றுள்ளவரோ நடத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் புலன் விசாரணை எனப்படும். இதனைப்பற்றி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 2 (ஏ)ல் கூறப்பட்டுள்ளது. 
புலன் விசாரணை செய்பவருக்குரிய தகுதி என்ன?
புலன் விசாரணை செய்பவர் காவல்துறை ஆய்வாளராகவோ, காவல்துறை உதவி ஆர்வாளராகவோ அல்லது தலைமைக் காவலராகவோ இருக்க வேண்டும்.
நடுவர் ஒருவரது உத்தரவு இல்லாமல், ஒரு வழக்கில் புலன் விசாரணை செய்யலாமா?
கைது செய்வதற்குரிய எந்த ஒரு  வழக்கிலும் நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவு இல்லாமலேயே காவல்துறை ஆய்வாளர், காவல்துறை உதவி ஆய்வாளர்  அல்லது  தலைமைக் காவலர் புலன் விசாரணை  செய்யலாம்.
புலன் விசாரணை - நடைமுறை என்ன? 
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 157ன்படி,  பொதுமக்களில் யாராவது ஒருவர் கொடுத்த தகவல் மூலமாகவோ அல்லது நீதிமன்ற நடுவர் அளித்த உத்தரவு மூலமாகவோ, காவல் அதிகாரி புலன் விசாரணை செய்யலாம்.
குற்றம் நடைபெற்றுள்ளதாக முடிவு செய்தால்...?
குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளது தமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்தால், புலன் விசாரணை அதிகாரியானவர், சம்பவ இடத்திற்குச் சென்று, வரைபடம் தயார் செய்து, சம்பவங்களுக்கு தொடர்புள்ள சாட்சியங்களை விசாரித்து, அவர்களிடம் இருந்து எழுத்து மூலமான வாக்குமூலங்களைப் பெற்று, குற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றம் நடைபெறவில்லை என்று தெரிய வந்தால்...?
குற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றும், தமக்கு கிடைத்த தகவல் தவறானது என்றும் அல்லது புலன் விசாரணை செய்யுமளவிற்கு, நடைபெற்ற குற்றம் கடுமையானதாக இல்லாமல் இருக்கும் போதும் புலன் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. 
ஆனால், அவ்வாறு புலன் விசாரணை செய்யாமல் இருப்பதற்கு உரிய காரணத்தை தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 157 (2)ன்படியும், காவல் நிலை ஆணைகள் 660ன் படியும், காவலர் படிவம் 90ன் படியும் அந்த குற்றம் சம்பந்தமாக தகவல் கொடுத்தவருக்கு புலன் விசாரணை செய்வதாக இல்லை என்ற விபரத்தை மாநில அரசு ஏற்படுத்தியுள்ள முறையில் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
சாட்சிகளை அழைக்கும் அதிகாரம்
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 160ன்படி, குற்றம் சம்பந்தமான புலன் விசாரணையில் சாட்சிகள் எவரையும் அழைத்து எழுத்து மூலமாக வாக்குமூலம் கொடுக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பலாம். அவ்வாறு சம்மன் வந்தால், சமபந்தப்பட்ட சாட்சிகள் புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி சாட்சியம் அளிப்பது அவசியம். இல்லையென்றால், அது குற்றமாகும்.
அதே நேரத்தில் சாட்சி அளிப்பதற்கு பதினைந்து வயதுக்கு உட்பட்ட ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தால் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களை விசாரணை செய்ய வேண்டும்.
புலன் விசாரனை செய்யும் போது அதிகாரியானவர் சாட்சிகளை தூண்டியோ, பயமுறுத்தியோ அல்லது வாக்குறுதி கொடுத்தோ அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறக்கூடாது.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 155
(1) கைது செய்ய முடியாத குற்றம் பற்றிய தகவல் ஒன்று காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு யாராவது ஒருவரின் மூலம் கிடைக்குமானால், அந்தத்தகவலின் சாராம்சத்தை அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தாம் வைத்து வரவேண்டிய ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்து, அந்த தகவல் தந்தவரை நடுவரிடம்  சாட்டிவிட வேண்டும்.
(2) கைது செய்ய முடியாத குற்றம் பற்றிய வழக்கு ஒன்றை விசாரணை செய்யவோ, அவ்வழக்கை மேல்விசாரணைக்கு அனுப்பி வைக்கவோ, அதிகாரம் உடைய நடுவர் ஒருவரின் உத்தரவு இல்லாமல் காவல் அலுவலர் எவரும் அந்த வழக்கை புலனாய்வு செய்யக்கூடாது.
(3) அத்தகைய உத்தரவை நடுவரிடம் இருந்து பெறுகின்ற காவல் அலுவலர் கைது செய்வதைத்தவிர மற்ற அதிகாரத்தை கொண்டவராக இருப்பார்.
(4) ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து, அவற்றில் குறைந்தது ஏதாவது ஒன்று கைது செய்யப்பட்ட குற்றமாக இருந்தால், அந்த வழக்கை கைது செய்யப்படக்கூடிய கூடிய வழக்காக புலன் விசாரனை அதிகாரியானவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காவல்நிலைய எல்லையை தாண்டிய பகுதியில் விசாரனை செய்தால்....?
மற்றொரு காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிக்குள் வசிக்கும் மக்களிடம் விசாரனை அல்லது சோதணை செய்வதாக இருந்தால், அந்த காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு அந்த விசாரணை அல்லது சோதனை பற்றிய அறிவிப்பை உடனடியாக அனுப்ப வேண்டும்.
அழைப்பாணை வழக்குகளில் புலன் விசாரணையின் காலம்
அழைப்பாணை வழக்குகளில் எதிரியானவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் புலன் விசாரணையை முடித்துவிட வேண்டும். அந்த காலத்தை நீடிக்க நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. நடுவருக்கு திருப்தி இல்லையென்றால், புலன்விசாரணையை தடுத்து நிறுத்திட உத்தரவிடலாம். அவ்வாறு நிறுத்தியதை அமர்வு நீதிமன்ற நீதிபதி தொடர கட்டளை பிறப்பிக்க அதிகாரம் கொண்டவராவார்.
புலன் விசாரணை பற்றிய நாட்குறிப்பு
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு -172ன்படி, புலன் விசாரனை செய்கின்ற அதிகாரி அந்த புலன் விசாரணை சம்பந்தமாக தான் செய்கின்ற செயல்களை, எடுக்கின்ற நடவடிக்கைகளை மற்றும் அது சம்பந்தமான நேரத்தை நாட்குறிப்பில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். இவற்றில் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. வழக்குகளில் இந்த நாட்குறிப்பு தேவை என்றால், நீதிமன்றமானது வரவழைத்து அதனை ஆய்வு செய்யலாம்.
ஆனால் எதிரியோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ நாட்குறிப்பை பார்க்கவோ, வரவழைக்கவோ முடியாது.
புலனாய்வை முடித்தவுடன் காவல் அலுவலர் விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173-ன்படி  நடுவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 
புலன் விசாரணை செய்த அதிகாரியானவர் தான் எடுத்த நடவடிக்கை பற்றி, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173 (2) (ii) ன்படி   குற்றம் சம்பந்தமாக தகவல் கொடுத்தவருக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டும்.
மறு புலன் விசாரணை
விசாரணை அறிக்கையை நடுவருக்கு அனுப்பிய பின்னர்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173(8)ன்படி விசாரணை அதிகாரியானவர் தான் புலன்விசாரணை செய்து முடித்த வழக்கு ஒன்றில் தேவைப்பட்டால் மறு புலன் விசாரணையை மேற்கொள்ளலாம்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.06.2018