disalbe Right click

Saturday, June 8, 2019

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

பிரதமரின் நேரடி பணியாளர்களையும், பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் உள்ளடக்கியது பிரதமர் அலுவலகம். இதன் நிர்வாக தலைவராக பிரதமரின் முதன்மை செயலர் இருப்பார். தற்போது இந்த பதவியில் நிரிபேந்திர மிஸ்ரா உள்ளார்.

இந்நிலையில், அவசர காலங்களில் உதவிக்கு பிரதமர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான முகவரிகள், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலக முகவரி:

152, தெற்கு பிளாக்,

ரைசினா ஹில்,

புதுடில்லி - 110011.

போன்:+91-11-23012312, 23018939

பேக்ஸ்: +91-11-23016857

பிரதமரின் வீட்டு முகவரி:

7, ரேஸ்கோர்ஸ்ரோடு,

புதுடில்லி-110001

போன்:+91-11-23911156,23016060

பேக்ஸ்: + 91-11-23018939

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள முகவரி

அறை எண்- 10,

பார்லிமென்ட் வளாகம்,

புதுடில்லி-110001

போன்:+91-11-23017660

பேக்ஸ்: +91-11-23017449

பிரதமர் அலுவலக இணை அமைச்சர்:

ஜிதேந்திரா சிங்

மொபைல்: +91 - 11-23010191, +91-11-23013719

பேக்ஸ்: +91-11-23017931

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: 
திரு அஜித் தோவல்

போன்:+91-11-23019227

பிரதமரின் முதன்மை செயலர் : 
திரு நிரிபேந்திர மிஸ்ரா

போன்:+ 91-11-23013040

பிரதமரின் செயலர்,  
திரு பாஸ்கர் குல்பே

போன்: +91-11-23010838

பிரதமரின் தனிச்செயலர்

திரு சஞ்சீவ் குமார் சிங்லா

போன்:+91-11-23012312

பிரதமரின் தனிச்செயலர்

திரு ராஜீவ் தொப்னோ

போன்:+91-11-23012312

பிரதமர் அலுவலகத்தின் தகவல் மற்றும் 
 தொலைநுட்பத்திற்கான சிறப்பு பணியில் உள்ள அதிகாரி

திரு ஹிரேன் ஜோஷி . போன்:+91-11-23014208



நன்றி : தினமலர் நாளிதழ் – 08.06.2019

Thursday, June 6, 2019

24 மணி நேரமும் இனிமேல் கடை - அரசாணை.


24 மணி நேரமும் இனிமேல் கடையை திறந்து வைக்கலாம்.
தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைகளை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த அரசாணை 11.07.2019-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இது அமுலில் இருக்கும். இதன்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம்.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்
⧭ ஒவ்வொரு வேலைக்காரருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.
⧭ 'பார்ம் எஸ்' என்ற விண்ணப்பத்தின் மூலம் ஒவ்வொரு வேலைகாரரைப் பற்றிய தகவல்களை உரிமையாளர் பெற வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும், இன்று வேலை செய்பவர்கள் யார்? விடுமுறையில் இருப்பவர் யார் என்ற தகவலை அந்தந்த நிறுவனங்கள் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
⧭ ஒரு வேலையாளை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும். ஒரு வேளை கூடுதல் நேரம் அவரை வேலைக்கு பயன்படுத்த வேண்டியது இருந்தால், அந்த வேலைக்காரரிடம் எழுத்துப்பூர்வ அனுமதியை நிறுவனம் முன்கூட்டியே பெறவேண்டும்.
⧭ விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை விடகூடுதல் நேரமோ வேலையாட்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளருக்கு எதிராகவோ அல்லது மேலாளருக்கு எதிராகவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
⧭ வழக்கமாக வேலை செய்யும் 8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் வேலையாட்கள் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கி கணக்கில் தான் அந்த பணத்தை நிறுவனங்கள் சேர்க்க வேண்டும்.
⧭ வேலையாட்களுக்கு ஓய்வு அறை, குளியல் அறை,பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்தந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 10.30 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது வாரத்திற்கு 57 மணி நேரத்திற்கு அதிகமாகவோ ஒரு வேலைக்காரரிடம் வேலை வாங்கக்கூடாது. 
பெண் வேலையாட்களுக்கான விதிமுறைகள்
⧭ இரவு 8 மணி வரை மட்டுமே பெண்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்
⧭ ஒரு வேளை பெண்கள் இரவில் வேலை செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி எழுதி வாங்க வேண்டும். மேலும், அவர்களுக்கு இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்கள் செய்து கொடுக்க வேண்டும்..
⧭ ஷிப்ட் அடிப்படையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, அந்த நிறுவனத்தின் மெயின் நுழைவு வாசல் வரை வாகன வசதிகளை அந்த நிறுவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.
⧭ பாலியல் ரீதியான தொந்தரவுகள் இல்லாமல் இருக்க கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு ஒன்றை அந்தந்த நிறுவனத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
மேலே சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பதை நீங்கள் உறுதி செய்தால், 24 மணிநேரமும் கடையை அல்லது நிறுவனத்தை திறக்க அனுமதி வேண்டி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் நேரில் வருகை தந்து உங்களது கடையை அல்லது நிறுவனத்தை ஆய்வு செய்து 24 மணி நேரமும் திறக்க அனுமதிப்பார்கள்.
Image may contain: text

No photo description available.

Related image

No photo description available.


****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 06.06.201

Sunday, May 26, 2019

லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?

லுக் அவுட் நோட்டீஸ் பற்றி.......
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
லுக் அவுட் நோட்டீஸ்  என்றால் என்ன?
                                     இதனை ஆங்கிலத்தில் Look out Circular  சொல்கிறார்கள். தமிழில் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை என்று அழகாக கூறப்படுகிறது. குற்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் அல்லது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்ற ஒரு நபர் சொந்த நாட்டை விட்டு, வேறு நாட்டுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காகவும்,  வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் இருப்பதற்காகவும் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாரால் வெளியிடப்படுகிறது?
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கின்ற ஒருவரின் நடவடிக்கைகளைப் பொறுத்து மத்திய அரசு ஆணையின்படி, அல்லது  CBI என்று சொல்லப்படுகின்ற (Central Bureau of Investigation)   மத்தியப் புலனாய்வுத் துறை தன் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்ற கைதிகளின் நடவடிக்கைகளைப் பொறுத்து,  இந்திய காவல்துறையால் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாருக்கு இது அனுப்பி வைக்கப்படுகிறது?
இந்த அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் நமது நாட்டை விட்டு வெளியில் தப்பிச் செல்ல முடியாதவாறு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பன்னாட்டு எல்லைச் சாவடிகள் செயல்படுகின்ற (Immigration Department) குடிவரவு துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும்  அனுப்பி வைக்கப்படும்.
அந்த அறிக்கையில் என்ன விபரங்கள் இருக்கும்?
அந்த சுற்றறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபரது பெயர், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விபரங்கள் இருக்கும். ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முற்படுகையில் மேற்கண்ட அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கை ஆயுள் காலம் எவ்வளவு?
இதனது ஆயுள்காலம் அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டு காலம் ஆகும். அதற்குப் பிறகு இது காலாவதி ஆகிவிடும். தேவை என்றால், மறுபடி பிறப்பிக்கப்படும்.
இந்த அறிக்கையை சம்பந்தப்பட்டவர் எதிர்க்க முடியுமா?
முடியும். தன்னைப்பற்றிய முழு விபரங்கள் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு , வழக்கு தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கைக்கு தடை பெறலாம். ஆனால், வழக்கின் போக்கை கருத்தில் கொண்டு தான் விதித்த தடையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில், வழக்கின் தன்மையைப் பொறுத்து, லுக் அவுட் நோட்டீஸிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் முதலிலேயே மறுப்பதும் உண்டு.



************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.05.2019