disalbe Right click

Sunday, October 23, 2016

டயாபடிக் நியுரோபதி

டயாபடிக் நியுரோபதி - என்ன செய்ய வேண்டும்?
டயாபடிக் நியூரோபதி என்றால் என்ன?
நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது நரம்பு இழைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவது டயாபடிக் நியூரோபதி.
இப்பிரச்னையால் நரம்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது மிக நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களை பாதிப்படையச் செய்கிறது. இதனால், நரம்புகளுக்குப் போதுமான அளவு பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.
நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் நியூரோபதி பாதிப்பு ஏற்படுமா?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் இப்பாதிப்புகளிலிருந்து தப்பலாம்.
டயாபடிக் பாதிப்பால் சிறுநீரக கோளாறு ஏற்படுவது ஏன்?
180 மி.கிராம் வரை சிறுநீரகங்கள் சர்க்கரையை சேமிக்கும் திறன் கொண்டவை. இந்த அளவைத் தாண்டும் பொழுது, மைக்ரோ அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறத் துவங்கும். 300 மி.கிராமிற்கு மேல் புரதம் வெளியேறினால் சிறுநீரகங்களை பாதிக்கும்.
புகை மற்றும் மது குடிக்கும் பழக்கம்இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்தக் குழாய்களின் உட்புற சுவரில் படிந்து, ரத்தக்குழாய் சுவர்களை சுருங்கச் செய்கிறது. இதனால், கால் பாதங்களுக்குச் செல்லக் கூடிய ரத்தத்தின் அளவு குறைந்து, காலில் ஏற்படும் காயங்கள், புண்கள் சரியாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
டயாபடிக் நியூரோபதியில் வகைகள் உள்ளனவா?
பெரிபெரல் நியூரோபதி, ஆடானமிக் நியூரோபதி, பராக்ஸிமல் நியூரோபதி, போகல் நியூரோபதி என, நான்கு வகைகள் உள்ளன.
அறிகுறிகள்?
கால் மரத்துப் போகும், கால் பாதங்களில் ஊசி குத்தும் உணர்வு, பாதம் மென்மையான பொருள் மீது நடப்பது போல் இருக்கும். காலில் ஏதாவது பொருட்கள் குத்தினால் கூட உணர்வு இருக்காது.
தடுக்கும் வழிமுறைகள்?
மது, புகைப் பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது தான் இதற்கு தீர்வு.
டயாபடிக் நியூரோபதி வராமல் தடுக்க உணவுக் கட்டுப்பாடு தேவையா?
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும். அதோடு தினமும் உடற்பயிற்சி அவசியம்.
தீர்வு என்ன?
டயாபடிக் நியூரோபதி வந்துவிட்டால் தீர்வு இல்லை. இதைத் தடுக்க ஒரே வழி, மேற்சொன்னவாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதே.
மருத்துவரின் அறிவுரையின் படியே மருந்துகள் எடுக்க வேண்டும்.

கே.பரணிதரன்பொது மற்றும் நீரிழிவு சிறப்பு நிபுணர்
நன்றி : தினமலர் நாளிதழ் – 18.10.201

No comments:

Post a Comment