disalbe Right click

Showing posts with label நுகர்வோர் கோர்ட். Show all posts
Showing posts with label நுகர்வோர் கோர்ட். Show all posts

Sunday, December 30, 2018

நுகர்வோர் சேவையில் குறைபாடா? ஆலோசனை பெற வசதி


சேவையில் குறைபாடா? ஆலோசனை பெற வசதி
சென்னை : பணம் கொடுத்து பெற்ற பொருட்கள் மற்றும் சேவையில் குறைபாடு இருந்தால், சட்ட ரீதியாக எப்படி அணுகுவது என்ற ஆலோசனைக்காக, இந்திய நுகர்வோர் சங்கம், புதிய தொலைபேசியை அறிவித்துள்ளது.
பொதுமக்கள், பணம் கொடுத்து பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைபாடு இருந்தால், பாதிக்கப்பட்டோர், நுகர்வோர் மன்றங்களை அணுகி தீர்வு பெறலாம். இதற்கு, சட்ட ரீதியாக எப்படி நடவடிக்கை எடுப்பது, யாரை எங்கு அணுகுவது என்பதில், மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இது போன்ற சந்தேகங்களை தீர்த்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னையில் உள்ள, இந்திய நுகர்வோர் சங்கம், புதிய தொலைபேசி சேவையை துவக்கி உள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, 044 - 2449 3443 என்ற, தொலைபேசி எண்ணில், காலை, 10:00 முதல், மாலை, 5:30 மணி வரை தொடர்பு கொண்டு, இந்த சேவையை பெறலாம்.
மற்றுமொரு எண்: 
044 24494575
*************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 31.12.2018 

Thursday, September 6, 2018

வருவாய்த்துறை அதிகாரி மீது வழக்கு


வருவாய்த்துறை அதிகாரி மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
உங்கள் நிலத்தைத் தவறாக இன்னொருவர் பெயருக்கு வருவாய்த்துறை மாற்றம் செய்திருந்து, அதனை நீங்கள் பழையடி உங்கள் பெயருக்கே வைக்க அதனிடம் விண்ணப்பித்திருந்து, அது உங்களுக்கு சேவை அளிக்காவிடில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேவையும், இழப்பீடும் கோரலாம்.
ஆதாரம்: பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு. வழக்கு எண்: 39/2015 தீர்ப்பு நாள்: 19/10/201

நுகர்வோர் நீதிமன்ற ஆணை நகல்







நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்களுக்கு.



தாசில்தாருக்கு தண்டணை

தாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம்
அரியலூர்: நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை அலைகழித்த தாசில்தாருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 47. விவசாயியான இவர், கீழப்பழூவூர் கிராமத்தில் வாங்கி உள்ள நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்கக்கோரி, 2014 ஆகஸ்ட், 21ல் அரியலூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தார்.
ஆனால், இவரது விண்ணப்பத்தின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், பாலசுப்ரமணி பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு செலவுக்காக, 2,000 ரூபாய் பாலசுப்ரமணிக்கு வழங்கவும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. இதன் பின்னரும், நடவடிக்கை இல்லை. இதை அடுத்து, மீண்டும் பாலசுப்ரமணி அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நுகர்வோர் நீதிமன்ற குறைதீர்ப்பு மன்ற தலைவர், ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார்.அதில், 2014 2015ல் பணியில் இருந்த, அரியலூர் தாசில்தார் வைத்திஸ்வரனுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.07.2017
வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் பிறப்பித்த ஆனை நகல்





நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்களுக்கு.

Saturday, February 17, 2018

'கிரெடிட் கார்டு' பரிவர்த்தனை:

இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னையிலுள்ள, பாரிமுனையைச் சேர்ந்தவர், அபுதாகீர். இவர், கோட்டூர்புரத்தில் உள்ள, ஒரு தனியார் வங்கியில், கிரெடிட் கார்டு வாங்கியிருந்தார்இவர், இந்தக் கார்டை பயன்படுத்தி, 2005ம் ஆண்டு  ஜூலை மாதத்தில், 20 ஆயிரத்து, 735 ரூபாய்க்கு, வாகன எரிபொருள் வாங்கியுள்ளதாகவும், அதனால், அந்தக் கடன் பணத்தை செலுத்த வேண்டும் என, ஷை வங்கி கோரியது.
அதிர்ச்சியடைந்த அபுதாகீர்
 அந்தக்'கார்டை, நான் பயன்படுத்தவில்லை; பொருட்களை நான் வாங்கவில்லை: ஏதோ தவறாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது' என, அபுதாகீர் வங்கியினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை வங்கி ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக்  கடன் தொகையை கட்டினால்தான், நீங்கள் கணக்கை தொடர முடியும் என்று, வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
இதனால், வேறு வழியின்றி அந்த வங்கியில்  20 ஆயிரத்து, 735 ரூபாயை, அபுதாகீர் செலுத்தினார். செலுத்திய தொகையுடன், உரிய இழப்பீடும், வழக்குச் செலவும் அந்த வங்கி  தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என, சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில்,  வழக்கு தொடர்ந்தார்
நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி மோனி அவர்கள், இந்த வழக்கில், 'வங்கி, முறைகேடாக வர்த்தகம் செய்துள்ளது அபுதாகீர்  செலுத்திய, 20 ஆயிரத்து, 735 ரூபாயுடன், இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்கு, 5,000 ரூபாயும் என, மொத்தம், 35 ஆயிரத்து, 735 ரூபாயை, மனுதாரருக்கு, வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018 

Monday, January 15, 2018

கையெழுத்தில் ஒரு புள்ளிகூட மாறக்கூடாது.

கையெழுத்தை மாற்றினால்......?
'மூல ஆவணங்களுடன் ஒப்பிடுகையில், காசோலையில் போடும் கையெழுத்தில், கூடுதல் புள்ளியோ, வளைவோ இருந்தால் செல்லாது' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள அசோக் நகரை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் கோபால் ஆவார். இவர் ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர், கடந்த 14.06.2004 அன்று, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியின் அடையாறு கிளைக்கு ரூபாய் 12,135 .17-க்கு காசோலை ஒன்றை அந்த வங்கிக்கு அனுப்பியுள்ளார். கிரடிட் கார்டில் வாங்கிய பொருளுக்காக, அந்த காசோலையை அவர் அளித்துள்ளார்.
ஆனால், காசோலைக்கான தொகை, கிரடிட் கார்டில் வரவு வைக்கப்படவில்லை; காசோலையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து, வங்கியில் கேட்டபோது, கையெழுத்தில் சில வித்தியாசங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
இதுகுறித்து, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், கோபால் தொடுத்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இந்த வழக்கை, மாநில நுகர்வோர் தீர்ப்பாய நீதிபதி ஆர்.ரகுபதி, உறுப்பினர் ஏ.கே. அண்ணாமலை ஆகியோர் விசாரித்தனர்.
கையெழுத்தில் ஒரு புள்ளிகூட மாறினாலும் அது செல்லாது.
அதில், 'காசோலையில் கையெழுத்து போடும்போது, வங்கியின் மூல ஆவணங்களில், ஏற்கனவே இடப்பட்டது போன்றுதான் கையெழுத்து போட வேண்டும். தேவையற்ற புள்ளிகளோ, வளைவுகளோ கையெழுத்தில் கூடுதலாக இருந்தால், அது செல்லாது. எனவே, அந்த கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், காசோலையை நிறுத்தி வைத்தது, சேவை குறைபாடு அல்ல' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
ஆதாரம் : 05.05.2014 - தினமலர் நாளிதழ் செய்தி
Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

நன்றி : முகநூல் நண்பர்  திரு Trdurai Kamaraj அவர்கள்.