disalbe Right click

Showing posts with label வீடு. Show all posts
Showing posts with label வீடு. Show all posts

Wednesday, February 14, 2018

அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான

அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான தேவையைக் கவனித்துக்கொள்ள இப்போதெல்லாம் அநேக அமைப்புகள் வந்துவிட்டன. இவை அடுக்குமாடியில் குடியிருப்பவர்களின் தேவையைத் தெரிந்து அவற்றைத் தீர்க்க உதவுகின்றன. இப்படி அடுக்குமாடியில் குடியிருப்பவர்களையும் அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளையும் இணைய சேவை ஒன்று இணைக்கிறது. அப்பார்ட்மெண்ட் அட்டா (Apartment ADDA) எனப்படும் ஒரு ஆன்லைன் போர்டல் அடுக்குமாடி குடியிருப்புகளையும், வில்லாக்களையும் நிர்வகிப்பதை எளிமையாக்குவதற்காக இயங்கிவருகிறது.
அந்த போர்டலில் பதிவு செய்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களையும், அடுக்குமாடி குடியிருப்பை நிர்வகிக்கும் சங்கத்தினரையும் அது இணைக்கிறது. இந்த போர்டலில் அவர்களுக்கான பிரத்யேகமான அட்டா அக்கவுண்ட் தொடங்கப்படுகிறது. இந்த அட்டா போர்டல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான தொடர்பு, நிர்வாகம், பராமரிப்பு பில்லிங், கணக்கியல், பணம் செலுத்தும் வசதி என எல்லாவற்றையும் வழங்குகிறது.
எளிமையாகும் தகவல்தொடர்பு
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், நிர்வாகச் சங்கத்தினர்கள் என இருவருக்கும் பல வசதிகளை வழங்கும்படி இந்த போர்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டலில் அடுக்குமாடியில் குடியிருப்பவர்களுக்கான ஃபோரம் இருக்கிறது. அதில் அவர்கள் விவாதிப்பதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்குமான வசதி இருக்கிறது.
ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் தனித்தனியாக வடிவமைக்கப்படும் இந்த அட்டா பக்கத்தில் ஆன்லைன் தகவல் பலகை இருக்கிறது. அதில் குடியிருப்பில் நடக்கும் கொண்டாட்டங்கள், சந்திப்புகள், காலியாக இருக்கும் பார்க்கிங் இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன், அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் குழந்தைகளுக்கான வகுப்புகள், பெரியவர்களுக்கான வகுப்புகள் என எல்லா வகுப்புகளின் நாட்களையும், நேரத்தையும் தெரிந்துகொள்வதற்கான காலண்டர் வசதியும் இந்த அட்டா போர்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தீர்வுகள்
அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு காவலர்களுக்கு உதவும் வகையில்கேட்கீப்பர் ஆப்ஸ்வசதியையும் வழங்குகிறது அட்டா. பார்வையாளர்கள் வருகையைப் பற்றிய தகவல்களையும் எஸ்எம்எஸ் மூலம் குடியிருப்பவர்களுக்கு இந்த அட்டா போர்டல் உடனடியாகத் தெரிவிக்கிறது. இந்த கேட்கீப்பர் ஆப்ஸ் இன்டர்நெட் வசதி இல்லாமலே இயங்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புக்குப் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு இந்த அட்டா போர்டல் பெரிதும் உதவும். குடியிருப்பவர்கள் ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்தால் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி அட்டாவின் பக்கத்தில் கோரலாம். ஆன்லைனிலேயே இந்த வாக்கெடுப்புக்குக் குடியிருப்பவர்கள் வாக்களிக்கலாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆன்லைனிலேயே தீர்வு காணும் வாய்ப்பை அட்டா வழங்குகிறது.
அடுக்குமாடி குடியிருப்புக்குப் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு இந்த அட்டா போர்டல் பெரிதும் உதவும். குடியிருப்பவர்கள் ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்தால் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி அட்டாவின் பக்கத்தில் கோரலாம். ஆன்லைனிலேயே இந்த வாக்கெடுப்புக்குக் குடியிருப்பவர்கள் வாக்களிக்கலாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆன்லைனிலேயே தீர்வு காணும் வாய்ப்பை அட்டா வழங்குகிறது.
நிர்வகிக்கும் பயிற்சி
அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறமை யாக நிர்வகிப்பதற்கான பலவிதமான பயிற்சிகளை நிர்வாகிகளுக்கு வழங்குகிறது. நீச்சல் குளங்களைப் பராமரிப்பதில் ஆரம்பித்துப் பல்வேறு விதமான பராமரிப்பு ஆலோசனைகளை வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்குக் குடியிருப்புகளில் அட்டா ஏற்பாடு செய்துதருகிறது.
இந்த அட்டா போர்டல் வசதி இப்போது சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களில் இயங்குகிறது. ஆறாயிரத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் அட்டா போர்டலால் பயனடைந்துவருகின்றனர்.
மேலும் அட்டா போர்டல் பற்றித் தெரிந்துகொள்ள: apartmentadda.com 

Wednesday, June 14, 2017

ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வது எப்படி?

 ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வது எப்படி?
நிலம் ஆறு கிரவுண்ட். மறைமலை நகருக்கு அருகில் ஒப்பந்ததாரர் தேவை என்னும் விளம்பரத்தைப் பிரபல நாளிதழ்களிலும் உள்ளூர் இலவச இதழ்களிலும் கண்டிருக்கலாம். இதன் முழுமையான பொருளை விளங்கிக்கொள்ள இயலவில்லை எனினும் விசாரித்ததில் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஒன்றரை அல்லது இரண்டு கிரவுண்ட் வைத்திருப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு ஓரிரண்டு தளங்கள் கிடைக்கும். ஆனால், பெரும் பரப்பு கொண்ட மனையை விற்பவர்கள் லாபத்திலும் பங்கு பெற முடியும்.
உதாரண சம்பவம்
இதுபோன்று, கூட்டாக இணைந்து செயல்படுகிற தன்மையில் கட்டாயம் ஏதாவது சிக்கல் வரும். இதை உறுதிப்படுத்துவதுபோல் மூன்று மாதத்துக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் செய்தியொன்று வெளியானது. மிகப் பிரபல, பெரிய ஒப்பந்ததாரர் ஒருவர் நில உரிமையாளர் ஒருவருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களை நிறுவியிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒப்பந்ததாரர் பிரபலமானவர் என்பதாலேயே, பல வாடிக்கையாளர்கள் தாமாக வந்து சேர்ந்து முன்பணம் தந்திருக்கிறார்கள். ஆனால், நில உரிமையாளர் ஒப்பந்ததாரர் மீது வழக்கு தொடர்ந்ததாகச் செய்தி தெரிவித்தது. காரணம், ஒப்பந்ததாரர் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அசலாகக் கட்டுகிற தளங்களுக்கும் நிறைய வேறுபாடு இருந்ததே.

நாலைந்து தளங்கள் எழுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டவர்களுக்கே தொந்தரவு ஏற்படுகிறது. கையொப்பமிட்ட புரிந்துணர்வின்படி, கட்டும் தளங்களில் ஒன்றோ இரண்டோ நிலத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்கத் தாமதமாகிறது.
தேர்ந்தெடுக்கச் சில வழிகள்
இத்தகைய நிலைமையில் ஒப்பந்ததாரரை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்கு நடைமுறைக்கு ஏற்பச் சில வழிகள் உள்ளன:

குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெயரைச் செவி வழிச் செய்தியாகவோவிளம்பரம் மூலமோ அறிந்து இருப்பீர்கள். அவர் கட்டி முடித்த தளங்களைச் சென்று பார்வையிடுங்கள். ஓரிரண்டு ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட தளவரிசைகளைப் பார்க்கலாம்.
பொதுவாக எல்லா ஒப்பந்ததாரர்களும் தனி வலைத்தளம் வைத்திருப்பார்கள். அதில் நிறைய விவரம் கிடைக்கும். அவர் மூலம் கட்டிடம் கிடைத்துப் பயனடைந்தவர்களிடம் பணிவாகப் பேசினால் தகவல் கிடைக்கும்.
வீடு கட்டும் முறையே மாறிவிட்டது. ஏனென்றால், 30 ஆண்டுக்கு முன், தனி வீடுதான். சாதாரண ஒப்பந்ததாரர் கட்டினால் போதும். இப்போது அப்படியல்ல. மண்ணின் தரம், தண்ணீர், சுற்றுப்புறம் போன்ற பல சோதனைகளைச் செய்ய, முறையான பொறியாளர்கள் அவசியம். மேலும், சுனாமி, வர்தா போன்ற அசம்பாவிதங்களைத் தாங்கிக் கொள்கிற அளவுக்குத் தளங்கள் அமையுமா என்பதையும் சோதிக்க வேண்டும். (2000-க்கு முன் இவை அறிந்திராதவை).
சில தடங்கல்கள் எதிர்பாராத வகையில் வரும். அரசு மாற்றத்தால் நிலவுகிற தாமதம், தண்ணீர்த் தட்டுப்பாடு, இத்துடன் தற்போதைய தலைவிரித்தாடும் பிரச்சினை மணல் பற்றாக்குறை. இவற்றையெல்லாம் சந்தித்துச் சமாளிக்கிற அளவுக்கு ஒப்பந்ததாரருக்கு மன உறுதியும் பண பலமும் இருத்தல் அவசியம்.
ஒப்பந்ததாரரிடம் மனையைக் கொடுப்பது, கிட்டத்தட்ட சேலையை முள்ளிலிருந்து எடுப்பது போலத்தான். கட்டிடம் உறுதியாகவும் இருக்க வேண்டும். தொகையும் பட்ஜெட்டுக்கு மேல் போகக் கூடாது.
லலிதா லட்சுமணன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.06.2017

Saturday, April 15, 2017

அடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா?


அடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா?

அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதாக நிம்மதியாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் வேலை அத்துடன் முடிந்துவிடாது. வீட்டுக்குப் பட்டா வங்க வேண்டுமல்லவா? தனி வீட்டுக்குப் பட்டா வாங்கலாம். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எப்படிப் பட்டா வாங்குவது? உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் 6 வீடுகள் இருந்தால், இந்த ஆறு பேரும் தங்களுக்கெனத் தனியாக உட்பிரிவுப் பட்டா வாங்க வேண்டும்.

அடுக்குமாடி வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப் பதிவு செய்துவிட்டால் சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைக்கக் கூடாது. அப்படி வாங்கிய சொத்துக்குப் பட்டா வாங்க வேண்டும். அதாவது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியிருந்தாலோ அல்லது அடுக்குமாடி வீட்டில் வீடு வாங்கியிருந்தாலோ அதற்கு உட்பிரிவுப் பட்டா வாங்குவது மிகவும் அவசியம். ஏனென்றால், நாம் வீடு வாங்குவதற்கு முன்போ அல்லது மனையில் ஒரு பகுதியை வாங்குவதற்கு முன்போ, அந்த மனை ஒருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கும். அந்த மனைக்குரிய பட்டா அவரிடம் இருக்கும். ஒரு வேளை உட்பிரிவுப் பட்டாவை வாங்காமல் இருந்துவிட்டால் பிற்காலத்தில் சிக்கல்கள் வரலாம்.

நிலங்களை வகைப்படுத்தி, அது எந்த வகையான நிலம் என்பதை ஆவணப்படுத்துவது வருவாய்த் துறையின் வேலை. இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்குப் பட்டாவையும் அரசு வழங்கியிருக்கும். வருவாய்த் துறை அளித்த பட்டா ஒருவருக்கு இருக்கும்போது அந்த மனை அவருக்குரியதாகவே இருக்கும். பத்திரம் இருந்தாலும், பட்டாதான் செல்லுபடியாகும். நாம் உட்பிரிவுப் பட்டா வாங்காமல் இருந்தால், தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கோரலாம். பட்டாவைக் காட்டி இன்னொருவருக்குச் சொத்தை விற்பனைகூட செய்யலாம். அதனால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அந்தச் சொத்துப் பத்திரப் பதிவு மூலம் உங்களுக்குரியது என்பதை மறைத்துச் சொத்தை விற்கலாம். வருவாய்த் துறையின் ஆவணப்படி உங்கள் வீடு அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்துக்கு உட்பிரிவுப் பட்டா இல்லை என்றால் சிக்கல் எழும். உட்பிரிவுப் பட்டா பெறாமல் இருக்கும்பட்சத்தில் சொத்தை விற்றவருக்கு அனுகூலமாகிவிடும். அடுக்குமாடி வாங்கியவர்கள் உட்பிரிவுப் பட்டா கோரி விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியவர்கள் உட்பிரிவுப் பட்டா கேட்டு விண்ணப்பித்தாலோ, சொத்து பிரிக்கப்பட்டு, மனையை உட்பிரிவு செய்து வருவாய்த் துறை பட்டா அளிக்கும். உதாரணத்துக்கு உங்கள் மனையின் சர்வே எண் 35/1 என்று வைத்துக்கொள்வோம். 6 அடுக்குமாடி உரிமையாளர்கள் உட்பிரிவுப் பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 35/1ஏ, 35/1பி, 35/1சி… என வரிசைப்படுத்தி உட்பிரிவுப் பட்டா வழங்குவார்கள். குறிப்பிட்ட மனை 6 பேருக்கும் சொந்தமாக இருக்கும்.

இதேபோல ஒரு மனையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாங்கியிருந்தால், அது இரண்டாகப் பிரிக்கப்படும். மேலேசொன்னபடி உட்பிரிவு செய்து பட்டா வழங்குவார்கள். அதோடு குறிப்பிட்ட அந்தச் சொத்தின் வரைபடத்தில் நமக்குரிய பகுதியைக் குறிப்பிட்டு வருவாய்த் துறை ஆவணப்படுத்தி வைப்பார்கள். இதன்மூலம் உங்களுடைய சொத்து முழுமையாக உங்களுடையதாகும். பழைய உரிமையாளர் எக்காரணம் கொண்டும் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாத நிலை உருவாக்கப்படும்.

எனவே இதுவரை பத்திரப் பதிவு செய்து பட்டா பெறாமல் இருந்தால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே வருவாய்த் துறை அலுவலங்களில் பட்டா கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த உட்பிரிவுப் பட்டா என்பது அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டுமல்ல. மனைகளுக்கும் மற்ற பயன்பாட்டு நிலங்களுக்கும் பொருந்தக்கூடியது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.04.2017


Sunday, March 5, 2017

தனி வீடு கட்டப் போறீங்களா?

Image may contain: house, text and outdoor
தனி வீடு கட்டப் போறீங்களா?
என்னதான் அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் அதிகரித்து வந்தாலும் தனி வீட்டுக்கான அந்தஸ்து தனிதான். அதனால் சென்னை வாசிகளில் சிலர், சிறிய இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருக்க வேண்டும் எனப் புறநகர்ப் பகுதிகளில் தனி மனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். இம்மாதிரித் தனி வீடு கட்டச் சில விதிமுறைகள் இருக்கின்றன.
மனை அளவு முழுமைக்கும் வீடு கட்ட முடியாது. அதற்கு விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. உதாரணமாக 1,200 சதுர அடி (அரை கிரவுண்டு) மனை வாங்கினாலும், அந்த மனை முழுவதும் கட்டிடம் எழுப்பிவிட முடியாது.
நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு விதம், நகராட்சி என்றால் ஒரு விதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன. 
மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.
அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள். 

மொத்தப் பரப்பில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன.
2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும். மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும்.
நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப் பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம்.
அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரம் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள்.
மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அனுமதி கிடைக்கக் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. 
பிளானில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். 
அப்படி இல்லையென்றால், பல காலத்துக்குப் பிறகு வீட்டை விற்கும்போதோ அல்லது மாடி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்கும்போதோ பிரச்சினகள் ஏற்படலாம். எனவே பிளானில் உள்ளபடி வீடு கட்டுங்கள்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 04.03.2017
ரயில்வே லைனில் இருந்து 30 மீட்டருக்கு அப்பாலும், சுடுகாட்டில் இருந்து 90 மீட்டருக்கு அப்பாலும், நீர்நிலைகள் இருந்தால், 15 மீட்டருக்கு அப்பாலும்தான் வீடு கட்டவேண்டும்.

Friday, November 11, 2016

சொந்த வீடு வாங்குவது சுலபம்


சொந்த வீடு வாங்குவது சுலபந்தான் - என்ன செய்ய வேண்டும்?

நடுத்தர வருமானப் பிரிவினரின் வாழ்நாள் கனவாக இருப்பது சொந்த வீடு. ஆனால், வீடு வாங்குவதற்கான முழுத் தொகையையும் ஒருவரால் மொத்தமாகப் புரட்டுவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது. வேறு என்னதான் செய்வது..? 

கவலையேபடத்தேவையில்லை. இருக்கவே இருக்கிறது இஎம்ஐ.

பெரிய கனவுகளை எல்லாம் மாதத் தவணை திட்டங்கள் மூலம்தான் எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிறிது சிறிதாக பணம் சேர்த்து வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம் என்றாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மிரட்டுவதாக இருக்கிறது. வீட்டு வாடகையும் அதிகமாக இருக்கிறது.

    அப்படியானால் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க  இஎம்ஐ-தானே ஒரே வழி.

 நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ள ஒரு சின்ன உதாரணம்…

சென்னை கூடுவாஞ்சேரியில்  600 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25 லட்சத்துக்கு கிடைக்கிறது. மாதச் சம்பளம் ரூ.40,000 வாங்கும் ஒருவரால் எப்படி இவ்வளவு தொகையைப் புரட்டி அந்த வீட்டை சொந்தமாக்கி கொள்ள முடியும். 

வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குவதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே சுலப வழி. ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை, கையில் இருக்கும் சேமிப்பு ரூ.5 லட்சம் போக, மீதி ரூ.20 லட்சத்துக்கு 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்கினால் வட்டி விகிதம் 10% என்கிறபோது, மாதத் தவணை18,200 ரூபாய்தான். 

ரூ.40,000 சம்பளம் வாங்கும் ஒருவரால் இந்தத் தொகையைக் கட்டுவது ஒன்றும் கஷ்டமில்லை. 

வாடகை கொடுக்கும் தொகையைவிட கொஞ்சம்தான் அதிகம். சொத்தும் சொந்தமாகும்; வாடகை வீட்டு நச்சரிப்புகளில் இருந்தும் விடுதலை. 
அதனால், உங்கள் கனவுகளின் பின்னால் ஓடாதீர்கள். அவற்றை நனவாக்க இஎம்ஐ செலுத்துங்கள். கொஞ்சம் யோசனை செய்தால் சொந்த வீடு வாங்குவது சுலபம்தான்.

நன்றி : நாணயம்விகடன் - 13.11.2016

Monday, October 31, 2016

நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியுமா


நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியுமா? என்ன செய்ய வேண்டும்?

சிஎம்டிஏ, டிடிசிபி அலுவலகங்களில் விண்ணப்பித்து நிலம், கட்டிட அனுமதி விவரங்களை அறியலாம்:
ரியல் எஸ்டேட் துறையினர் தகவல்
பொதுமக்கள் தாங்கள் வாங்கிய நிலம், கட்டிடத்துக்கான அனுமதி உள்ளதா என்பதை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் அல்லது கட்டிடங்களை பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பொதுமக்கள் தற்போது தாங்கள் வாங்கிய நிலத்தின் அனுமதி தொடர்பாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள், தங்கள் நிலம் தொடர்பான ‘லே-அவுட்’-க்கு யார் அனுமதியளித்துள்ளனர் என்பதை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய பகுதி என்றால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அந்த ‘லே அவுட்’ டை அங்கீகரித்திருக்க வேண்டும். மற்ற பகுதிகள் என்றால், நகர ஊரமைப்பு திட்ட இயக்ககம் (டிடிசிபி) அங்கீகாரம் இருக்க வேண்டும்.
இவற்றை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பது தொடர்பாக, தமிழ்நாடு வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் டி.மணிசங்கர் கூறியதாவது:
நிலம் அல்லது வீட்டை சென்னைக்கு உட்பட்ட பகுதியில் வாங்கினால், அதற்கான ஆவணத்துடன், இந்த நிலம் அல்லது கட்டிடம் தொடர்பான அனுமதி விவரங்களை அளிக்கக்கோரி, சிஎம்டிஏ-வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள, ஆவண எண், ஆவணத்தை சரிபார்த்து அனுமதி தொடர்பான விவரங்களை தெரிவிப்பார்கள். உடனடியாக தெரிய வேண்டும் எனில் வாய்மொழியாக விவரங்களை அளிப்பார்கள்.
எழுத்துப் பூர்வமாக வேண்டும் எனில், 30 நாட்களுக்குள் அளிப்பார்கள். அதில், அந்த ‘லே அவுட்’ அல்லது குடியிருப்பு அனுமதி பெற்றதா, அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை அறியலாம்.
சென்னைக்கு வெளியில் உள்ள மற்ற பகுதிகளுக்கான அனுமதி விவரங்களை டிடிசிபி அலுவலகத்தில் இருந்து பெற முடியும். சாதாரண பொதுமக்கள் இவற்றை பார்ப்பதில்லை. காலதாமதமாகும் என அலுவலர்கள் தெரிவித்தால், நிலத்தை விற்பவர் அவசரம் காட்டுவார்கள்.
அப்போது, நிலத்தை வேறு யாராவது வாங்கிவிடுவார்கள் என அவசரப்பட்டு, பதிவு செய்கின்றனர். இது தொடர்பாக, அரசும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதில்லை.
மேலும், தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அடுக்குமாடி கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறும் அமைப்புகள், அது தொடர்பான விவரங்களை ஆன்லைனில் பார்த்துக்கொள்ளும் வசதியை அளிப்பதில்லை.
தற்போதைய சூழலில் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி அனுமதி தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளத்தில் பார்க்க முடியாது. அரசு வெளிப்படையாக இந்தத் தகவல்களை தெரிவிக்க முன்வர வேண்டும்.
மேலும், நிலத்தை மேம்படுத்துவோர், அதற்கான ‘லே அவுட்’ அனுமதி பெறும் போது, சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக அரசுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அந்தத் தொகையில், அரசு சாலை, குடிநீர், கழிவுநீர் அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு அதை உடனடியாக செய்வதில்லை. இதனால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, நிலத்தை மேம்படுத்துபவரே இந்த வசதிகளை செய்து அளித்தால் அனுமதிப்பதாக அறிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தற்போது, கட்டிட வரைபடம் அனுமதியை விரைவாக அளிப்பதற்கான முயற்சியில் சிஎம்டிஏ ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிஎம்டிஏ-வில் திட்ட அனுமதி விண்ணப்ப பரிசீலனைக்கான தானியங்கி மென்பொருள் ‘ஏபிபிஏஎஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பு கட்டிடங்கள், மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடங்களுக்கான அனுமதியை வெளிப்படையாக வழங்க முடியும்.
‘லே-அவுட்’ அனுமதியை பொறுத்தவரை, பொதுமக்கள் இடத்தை வாங்கும் முன், வரைபடத்தில் அளிக்கப்பட்டுள்ள அனுமதி எண், ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

கி.கணேஷ்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 01.11.2016



Saturday, October 22, 2016

பழைய வீட்டின் மதிப்பைக் கண்டுபிடிக்க


பழைய வீட்டின் மதிப்பைக் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?

பழைய வீடோ புதிய வீடோ எது வாங்குவதாக இருந்தாலும் அதில் வில்லங்கம் பார்ப்பது முக்கியம். அந்த வீட்டைச் சரியான விலைக்குத்தான் வாங்குகிறோமா என்பது அதை விட முக்கியம். வாழ்க்கையில் எப்போதாவது வாங்கும் வீடு, வாழ்க்கை முழுவதும் அவஸ்தையைத் தந்துவிடக் கூடாது.

வீடு வாங்குபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தோ, ஆன்லைன் மூலமாகவோ வில்லங்கம் பார்ப்பது வழக்கம். சில சமயங்களில் இதிலும்கூடச் சிலர் ஏமாற்ற வாய்ப்புண்டு. விலை விஷயத்தைப் பொறுத்தவரை, வீடு விற்பவர், வாங்குபவர் இடையே தீர்மானிக்கப்படுகிறது. இப்படி வாங்கும்போது, சில சமயங்களில் வீட்டை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து ஏமாந்துவிடுவதும் உண்டு.

சரி, வில்லங்கத்தைச் சரியான முறையில் பார்ப்பது எப்படி? வீட்டைச் சரியான விலையில் மதிப்பீடு செய்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் தேசிய மதிப்பீட்டாளர் கழகத்தின் முன்னாள் துணைத் தலைவர் பி.கனகசபாபதி:

வீடு வாங்குவது என முடிவு செய்துவிட்டால், அதற்கு 2 முக்கிய விஷயங்களைச் சரிபார்க்கலாம்;

1) வில்லங்கம்

2)  விலை.

வில்லங்கம்

வில்லங்கத்தைப் பொறுத்தவரை, பொதுவாகப் பலரும் பத்திரப்பதிவு அலுவலகத்திலோ, ஆன்லைன் மூலமோ வில்லங்கச் சான்று பெறுவார்கள். 

இதில் சில சமயங்களில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் அதைவிட, இதற்கெனப் பிரத்யேகமாக உள்ள வழக்கறிஞர்களை (Competent Advocates) அணுகினால், வில்லங்க விஷயங்கள் 100 சதவீதம் துல்லியமாக அறிய ஏதுவாக இருக்கும். அவர் வீட்டின் மூலாதாரப் பத்திரம் முதல் மின் இணைப்பு ரசீது வரை அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, வீட்டை வாங்கலாமா, வேண்டாமா எனக் கூறுவார்.

சொத்து மதிப்பீடு

வீட்டில் எந்த வில்லங்கமும் இல்லை எனத் தெரிந்தால், அடுத்து அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்வது முக்கியமானது. சொத்து மதிப்பீடு என்பது சொத்து வாங்க இருப்பவரும், சொத்தை விற்க இருப்பவரும் சேர்ந்து விவாதித்து, எந்த நிர்பந்தத்திற்கும் உள்ளாகாமல், ஒரு விலைக்கு வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒப்புக் கொள்வது. வீடு வாங்குவதாக இருந்தால் வீட்டை வாங்க இருப்பவருக்கும், வீட்டை விற்க இருப்பவருக்கும் வீட்டின் மதிப்பு தெரியவில்லை என்றால், மத்திய அரசில் பதிவு பெற்ற மதிப்பீட்டாளரை அணுகலாம்.

அவர், அந்த வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, வீடு, அதில் உள்ள வசதிகள், இதர அம்சங்கள் ஆகிய 4 விஷயங்களைக் கொண்டு வீட்டின் மதிப்பைக் கணக்கிடுவார்.

இதில், மனையின் மதிப்பு அப்போதைய சந்தை மதிப்பைக் கொண்டு கணக்கிடலாம். வீட்டைப் பொறுத்தவரை, எத்தனை சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது, எந்த ஆண்டு கட்டப்பட்டது, சுவரின் அகலம், உறுதித் தன்மை, இன்னும் எத்தனை வருடத்துக்குக் கட்டிடம் உறுதியாக இருக்கும், வீட்டைக் கட்டிய கட்டுநர் போன்ற காரணிகள் எடுத்துக் கொள்ளப்படும். 

பொதுவாக வீட்டின் மதிப்பானது, கட்டப்பட்ட ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் ஒன்றரை சதவீதம் மதிப்பு குறையும்.ஒரு வீடு கட்டி 10 ஆண்டுகள் ஆகி இருந்தால், 15 சதவீதம் தேய்மான மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக 5 ஆண்டுக்கு முன் ஒரு வீட்டை கட்ட ரூ.30 லட்சம் செலவாகி இருந்தால், தற்போது அந்த வீட்டின் உத்தேச மதிப்பு ரூ.27 லட்சத்து 75 ஆயிரம் எனக் கணக்கிடலாம்.

அடுத்தது, வீட்டில் உள்ள வசதிகள். உள் அலங்கார வேலைப்பாடுகள், வாஸ்து, சமையலறை வசதி, வார்ட்ரோப், ஷோகேஸ், பூஜை அறை, மெயின் கதவு உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்படும். இவற்றுக்கும் தேய்மான மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதர வசதிகளைப் பொறுத்தவரை, மோட்டார் சர்வீஸ், சாக்கடை வசதி, காம்பவுண்ட் சுவர் போன்றவற்றின் மதிப்பு எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த 4 அம்சங்களையும் எடுத்துக்கொண்டு கணக்கிடும் மதிப்பு Present Worth எனப்படும். இது தவிர, வீடு அமைந்துள்ள இடம் கோயில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள், முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் அருகில் இருந்தால் Present Worth-ஐவிடச் சற்று அதிகமாகவும், நேர்குத்தல் இடமாக இருந்தாலோ, டாஸ்மாக், மீன் மார்க்கெட், பம்பிங் ஸ்டேஷன் ஆகியவற்றின் அருகிலேயோ, தாழ்வான பகுதியிலேயோ இருந்தாலோ Present Worth-ஐ விடச் சற்றுக் குறைவாகவும் இருக்கும்.

இத்தனை அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வீடு வாங்கினால், எந்தப் பிரச்சினையும் இன்றி நிம்மதியாக இருக்கலாம். ஆனால், சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே, இதுபோல முறையாக வாங்குபவர்களாக (Prudent Buyers) உள்ளனர். ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்குவதாக இருந்தால் தான், இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

வங்கி மூலம் கடன் பெற்று வாங்குவதாக இருந்தால், இந்த அனைத்து நடைமுறைகளையும் வங்கி நிர்வாகமே மேற்கொள்ளும். இதற்காகவே ஒவ்வொரு வங்கிக்கும் Panel Advocates மற்றும் மதிப்பீட்டாளர்கள் உள்ளனர்.

எவ்வளவு கட்டணம்?

மதிப்பீட்டாளர்கள், சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை மதிப்பிட சுமார் ரூ.8 ஆயிரமும், ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை மதிப்பிட சுமார் ரூ.10,750-ம் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

அதன் பின் வரும் ஒவ்வொரு கோடிக்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வீடு வாங்கும்போது, முறையாக மதிப்பிடச் சில ஆயிரம் செலவளிப்பது பெரிதல்ல. வீடு வாங்குபவர் மட்டுமல்ல, வீடு விற்பவரும், வீட்டை மதிப்பீடு செய்ய இதே முறையைப் பின்பற்றலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.10.2016